அமைச்சர் நாமல் கிழக்கிற்கு விஜயம்

அமைச்சர் நாமல் கிழக்கிற்கு விஜயம்

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கிழக்கிற்கான விஜமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சட்ட ஆலோசகர் சிபான் மஹ்ரூப் தெரிவித்தார்.

இதன்போது, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள விளையாட்டு கழகங்கள் மற்றும் இளைஞர்கள் கழகங்களின் பிரதிகளை அவர் சந்திக்கவுள்ளார்.

இதற்கு மேலதிமாக கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் மைதானங்களின் அபிவிருத்தி பணிகளையும் அவர் பார்வையிடவுள்ளார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட பின்னர் கிழக்கிற்கு மேற்கொள்ளும் முதலாது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும்.