BCAS உயர்கல்வி வளாகம் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இலவச உயர்கல்வி கண்காட்சியும் இரத்ததான முகாமும்

BCAS உயர்கல்வி வளாகம் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இலவச உயர்கல்வி கண்காட்சியும் இரத்ததான முகாமும்
BCAS உயர்கல்வி வளாகம் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இலவச உயர்கல்வி கண்காட்சியும் இரத்ததான முகாமும்

British College of Applied Studies (BCAS) உயர் கல்வி வளாகம் தனது 20 வருட பூர்த்தியினை முன்னிட்டும் தனது கிழக்கிலங்கை வளாகமான இல: 392/1, பிரதான வீதியில் இயங்கிவரும் BCAS கல்முனை வளாகத்தின் 5 வருட பூர்த்தியினை முன்னிட்டும் கல்முனை Ashraf Memorial Hospital (AMH) உடன் இணைந்து 2019ம் கல்வி ஆண்டுக்கான மாபெரும் உயர்கல்விக் கண்காட்சி ஒன்றிற்கு தயாராகி வருகின்றது.

உயர்கல்வித் தறையில் சுமார் 20 வருடகால நிபுணத்துவ அனுபவம் கொண்ட BCAS உயர்கல்வி வளாகமானது எதிர்வரும் 12ம் மற்றும் 13ம் திகதிகளில் கிழக்கிலங்கையில் மாபெரும் உயர்கல்விக் கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பூரண ஒத்துழைப்புடன் இரத்ததான முகாம் ஒன்றினையும் இக்கண்காட்சியின் ஓர் அங்கமாக இணைத்திருப்பது இக்கண்காட்சியை மேலும் அர்த்தமுள்ளதாக்குகின்றது.

இக்கண்காட்சியில் BCAS உயர் கல்வி வளாகத்திலுள்ள அனைத்து கற்கை நெறிக்கான துறைகளும் பங்குபற்றவிருக்கின்றன. அந்த வகையில்

1.         School of Engineering

2.         School of Management

3.         School of Computing

4.         School of Building Studies

5.         School of Languages

6.         School of Bio Medical Science

7.         School of Hotel Management

8.         School of Legal Studies

9.         Department of Study Abroad

10.       Department of Study Medicine என பல்வேறு கற்கை நெறிகளுக்கான காட்சிப்படுத்தல்களுடன் மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகளும் இங்கு வழங்கப்படவிருக்கின்றன.

அத்தோடு பின்வரும் மேலதிக சிறப்பம்சங்களும் இக்கண்காட்சியில் இடம்பெறவிருக்கின்றன.

Education EXPO

  • Job Fair
  • Innovative projects
  • Medical Camp
  • English Puzzle
  • English Grand master (Mind Game)
  • English word search
  • Spell Master
  • Online listening test
  • Cross word
  • Blood Donation
  • Education Counseling
  • Business Development plans
  • Cookery demos
  • Construction Consultancy
  • Game Zone
  • Food Gallery etc.

மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி உயர்கல்விக் கண்காட்சிக்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. I.K.G. Muthu Banda, Esq. அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.

கௌரவ அதிதியாக பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், முன்னாள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் தற்போதைய BCAS உயர் கல்வி வளாகத்தின் கற்கை நெறிகளுக்கு பொறுப்பான பீடாதிபதியுமான Professor. Kshanika Hirimburegama அவர்களும் விஷேட அதிதியாக BCAS உயர்கல்வி வளாகத்தின் தவிசாளர் Eng. M.M. Abdur Rahuman அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

.பொ.. உயர்தரத்தின் பின்னர் தங்களது உயர் கல்விக்கான சரியான விளை நிலத்தை மாணவர்களும் பெற்றோரும் தேடிக் கொண்டிருக்கும் மிக முக்கியமான காலகட்டம் இது. அவ்வாறானவர்களுக்கு சிறந்த வழிகாட்டல் நிகழ்வாக இது அமையவிருப்பதோடு மாணவர்களின் புத்துணர்ச்சியை தூண்டும் புத்தாக்கங்கங்களும் இக்கண்காட்சியின் முக்கிய அம்சங்களாக இடம்பெறவிருக்கின்றன.

மேலும் துறைசார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த விரிவுரையாளர்களிடம் தனித்தனியாக மாணவர்களும் பெற்றோரும் உயர் கல்வி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கிழக்கிலங்கை மாணவர்களுக்கு மிகவும் வரப்பிரசாதமாக அமையவிருக்கும் இக்கண்காட்சியில் .பொ.. சாதாரண தரம் மற்றும் உயர்தரம் எழுதி முடித்த மாணவர்கள், பெற்றோர்கள், கல்விமான்கள், வர்த்தகர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

BCAS கல்முனை வளாகத்தின் முகாமையாளர், உத்தியோகஸ்தர்கள், பழைய மாணவர்கள்...

தகவலும் படமும் - பைசர்