'ஆறுமுகன் தொண்டமானின் மலையகத்துக்கான பல்கலைக்கழக கனவு 1 வருடத்தில் நனவாகும்'
ஹட்டன் - கொட்டகலையில் மலையகத்துக்கான பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவது தொடர்பான காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கனவு,
ஒரு வருடத்துக்குள் பூர்த்தியாக்கப்பட்டு, அவருடைய முதலாமாண்டு நினைவஞ்சலியின் போது திறக்கப்படுமென, அரசாங்கம் அறிவித்தது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம், அடுத்த வார அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்படுமென, அமைச்சரவையின் பேச்சாளரும் உயர் கல்வி அமைச்சருமான பந்துல குணவர்தன நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகச் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பொருள்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்துக்கு, அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றது எனவும் தெரிவித்த அமைச்சர் பந்துல, தேசிய உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
தேசிய முதலீட்டாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு இதனால் பிரச்சினைகள் ஏற்படுமாயின், நிதி அமைச்சின் செயலாளருக்கு, மின்னஞ்சல் மூலம் அது பற்றி அறிவிக்க முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)