சீனாவினால் பாடசாலை மாணவர்களுக்கு முகக் கவசங்கள் அன்பளிப்பு
நாடளாவிய ரீதியில் குறைந்த வசதிகளையுடைய பாடசாலை மாணவர்களுக்குப்
பகிர்ந்தளிப்பதற்காக, கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் 125,000 முகக் கவசங்களைக்
கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளது.
பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், இவற்றை
மாணவர்களுக்கு வழங்குமாறு, சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கொவிட் 19க்கு எதிரான போராட்டத்தில் சீனாவும் இலங்கையும் ஒத்துழைப்புடன்
செயற்பட்டு வருவதாக, இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)