தேசிய மற்றும் மனித பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான சவூதியின் முயற்சிகள்

 தேசிய மற்றும் மனித பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான சவூதியின் முயற்சிகள்

காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி,
இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர்

உலக பாரம்பரிய தினம், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இது பௌதீக மற்றும் கட்புலனாகாத கலாசார பாரம்பரியங்களை பாதுகாக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. 

ஏனெனில் இவை நம்முடைய கூட்டு மனித அடையாளத்தின் தூணாகவும் நாகரிகங்களுக்கு இடையேயான பாலமாகவும் செயல்படுகின்றன. இந்த நிலையில், சவூதி அரேபியா, தன் தேசிய பாரம்பரியங்களை பாதுகாப்பதில் அது கொண்டுள்ள உறுதியான கடப்பாட்டை மீண்டும் உறுதி செய்கிறது.

இது ஒரு பெறுமதிமிக்க கலாசார மற்றும் வரலாற்றுப் பொக்கிஷமாக கருதப்படுகிறது, இது தற்போதைய காலத்தை உருவாக்கவும், எதிர்காலத்தை கட்டியெழுப்பவும் உதவுகிறது.

தேசிய மட்டத்தில், சவூதி அரேபியா தனது "விஷன் 2030" நோக்கத்திற்கு அமைவாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதில் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அரசாங்கம் இந்த நோக்கத்திற்கு ஏற்ற வகையில் "பாரம்பரிய ஆணையம்" மற்றும் "அருங்காட்சியகங்கள் ஆணையம்" ஆகியவை போன்ற நிபுணத்துவ அமைப்புகளை உருவாக்கியுள்ளது.

இவை வரலாற்று இடங்களை பாதுகாக்கவும், ஆவணமாக்கவும், புதுப்பிக்கவும், பாரம்பரிய கைவினைப்பொருட்கள் மற்றும் கலைகளைப் பலப்படுத்தவும் செயல்படுகின்றன.

இந்த முயற்சிகள் கீழ்க்காணும் சவூதி இடங்களை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க வழிவகுத்துள்ளன:  

•    சாலிஹ் நகரங்கள்
•    திரியாவில் உள்ள அத்-துரெயிஃப் மாவட்டம்  
•    வரலாற்றுச் செழிப்பு மிக்க ஜித்தா பிரதேசம்
•    அல்-அஹ்ஸா சோலை
•    ஹாயில் பகுதியில் உள்ள பாறை கிராஃபிக் தளங்கள்
•    ஹிமா கலாசாரப் பகுதி

மேலும், கட்புலனாகாத கலாசார பாரம்பரியத்தில், அரபு எழுத்தாணி, அர்தா நடனம், அல் கத் அல்-அசிரி உட்புற சுவர் அலங்காரக் கலை, மற்றும் சவூதி கோபி போன்றவை யுனெஸ்கோ பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

சர்வதேச மட்டத்தில், சவூதி அரேபியா உலக பாரம்பரியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது பல்வேறு சர்வதேச அமைப்புகளுடன் கூட்டுப் பணிகளில் ஈடுபட்டு, பழமையான இடங்களை மறுசீரமைக்கும் திட்டங்களில் பங்களிக்கிறது.

உதாரணமாக, சவூதி அரேபியாவின் லூவர் மியூசியத்திற்கான உதவி, யுனெஸ்கோவுடன் இணைந்து மௌசிலை மீட்டெடுக்கும் திட்டம் மற்றும் அரபு உலகின் பாரம்பரியங்களை பாதுகாக்கும் பிராந்திய மையம் போன்றவை உள்ளடங்கும்.

பாரம்பரியம் என்பது நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் கருவியாகவும், கலாசார உரையாடலும் உலக சமாதானத்திற்கான ஊடகமாகவும் சவூதி அரேபியா கருதுகிறது. 

இந்த வகையில், சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கலாசார உறவுகள், இருநாடுகளின் பண்பாட்டு பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு, பரஸ்பர மாற்றத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைக்கின்றன.

இந்த உலக பாரம்பரிய தினத்தில், இந்த கூட்டுப்பாரம்பரியத்தை பாதுகாக்கும் முக்கியத்துவத்தை நாம் நினைவுகூர வேண்டும். சவூதி அரேபியா, கலாச்சார பன்முகத்தன்மையிங் பெறுமானங்களை மேன்படுத்தும் தேசிய மற்றும் உலக பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் தன் முழு ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது. உலகம் முழுவதும் ஒரு அமைதியான மற்றும் வளமான பாரம்பரிய எதிர்காலம் அமைய வாழ்த்துகள்!