முஸ்லிம் சமய விவகார திணைக்கள பணிப்பாளர் இடமாற்றம்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் பதவியிலிருந்து ஏ.பீ.எம். அஷ்ரப், இன்று (22) வியாழக்கிழமை இடமாற்றப்பட்டுள்ளார்.
இதற்கமைய, அரச சேவைகள் மற்றும் மாகாண சபை உள்ளூராட்சி அமைச்சிற்கு இவர் இடமாற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.எல்.எம். அன்வர் அலி, பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அறிவித்தல் புத்தசாசனம் மத மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்த்தனவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புனித ஹஜ் பெருளை முன்னிட்டு பள்ளிவாசல்களில் வழமையாக மேற்கொள்ளப்படும் குர்பான் கொடுத்தல் நிகழ்விற்கு இந்த வருடம் வக்பு சபையினால் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான அறிவிப்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரபினாலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அக்கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இதற்கு பாரிய எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இதனையடுத்தே ஏ.பீ.எம். அஷ்ரப், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் பதவியிலிருந்து இடமாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)