இளம் தலைவர்களுக்கான முன்மாதிரி நிகழ்ச்சித் திட்டம்
இளம் தலைவர்களுக்கான முன்மாதிரி நிகழ்ச்சித் திட்டஸம்ஸம் பவுண்டேன் அறிமுகம் செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சித் திட்டமானது முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பலதுறைகளில் திறமைகளை வெளிக்காட்டிய இளைஞர், யுவதிகளை இலங்கையர்களுக்கான முன்மாதிரி மிக்க பிரஜைகளாகவும் சமூக ஆர்வலர்களாகவும் பயிற்றுவிக்கும் நோக்கில் தனித்துவமான தலைமைத்துவ பண்புகள் மற்றும் ஆற்றல் அபிவிருத்தியை உருவாக்குவதற்கான நிகழ்ச்சியாகும்
நீங்கள் :
1. வயது 16க்கும் 30க்கும் இடைப்பட்டவராயின்,(2021 மார்ச் 01 ஆம் திகதிக்கு)
2. சமூக பிரச்சினைகள் மற்றும் சவால்கள் பற்றிய அறிவும் அவற்றைத் தீர்ப்பதற்கான 3. ஆசையும் இருப்பவராயின்,
4. ஏதோ ஒரு துறையில் (விளையாட்டு, கலை, ஊடகம் கல்வி மற்றும் கல்வி சாரா ) 5. கடந்த ஐந்து வருடங்களுக்குள் தேசிய,சர்வதேச மட்டத்தில் சாதனை படைத்தவர் அல்லது அங்கீகாரம் பெற்றவராயின்
5. இலங்கையின் பல்வகைத் தன்மையின் பெறுமதி, இன நல்லிணக்கம் மற்றும் நாட்டிற்கான தனது கடமைகளை நிறைவேற்ற விரும்பும் பிரஜையாக இருப்பின்,
2021 ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன் இந்த இணையத்தள படிவத்தினூடாக உங்களது விபரங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
• 10 மாத கால நிகழ்ச்சித் திட்டம் (மாதத்திற்கு ஒரு முறை ஒன்றுகூடலாகவும் ஏனைய காலங்களில் online முறைமையில்)
• EYLF நிகழ்ச்சிக்கான சகல செலவுகளும் உள்ளடங்கிய 30 புலமைப் பரிசில்கள்
• விண்ணப்பதாரிகள் முன் திறமைகள் மற்றும் ஆற்றல்களுக்கு அமைய நேர்முகப் பரீட்சை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நிகழ்ச்சி முடிவில் ஒரு வெளிநாட்டு சுற்றுலா மேற்கொண்டு சமூக ஒற்றுமை, வேற்றுமைக்கு மதிப்பளித்தல், தேசத்தின் கடமைகள், சமூக நலனுக்கான தொழில்நுட்ப பாவனை போன்ற பல அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
Comments (0)
Facebook Comments (0)