வட மாகாண முன்னாள் ஆளுநர் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமனம்
வட மாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த பரிந்துரைக்கு பாராளுமன்ற சபை கடந்த செவ்வாய்க்கிழமை (26) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்படுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியினை அவர் இராஜினாமாச் செய்திருந்தார்.
இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிப்பது தொடர்பில் பேரவை தனது இணங்கத்தை வழங்கியுள்ளது.
சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளராகவும், சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும், வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களின் செயலாளராகவும் அவர் முன்னர் கடமையாற்றியிருந்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தன தலைமையில் ஒன்லைன் முறையில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் ஆகியோர் இணைந்துகொண்டிருந்தனர்.
Comments (0)
Facebook Comments (0)