ஊரடங்கு அமுலிலுள்ள போது ஆயுர்வேத வைத்தியசாலைகளை திறக்க உத்தரவு
நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலப் பகுதியில் ஆயுர்வேத வைத்தியசாலைகளை திறந்து பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்குமாறு அரசாங்கம் இன்று (07) செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் இன்று இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் மேலும் நான்கு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)