ஜனாஸாக்களின் சாபமே வாட்டுகிறது: அதாவுல்லா

ஜனாஸாக்களின் சாபமே வாட்டுகிறது: அதாவுல்லா

கொரோனா வைரஸால் மரணமடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டதன் சாபத்தையே நாடு தற்போது அனுபவித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லா தெரிவித்தார்.

கலப்படமில்லாத கல்வி, உணவு, சுகாதாரத்துறையே ஒரு நாட்டுக்கு முக்கியமானது. எனினும், இது இந்த நாட்டில் தற்போது இல்லாது போயுள்ளது எனவும் அவர் நேற்று (23) புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மக்கள் வரிசைகளில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பொருளாதாரக் கொள்கைகளில் விடப்பட்ட தவறுகள் இந்நிலைமைக்கு காரணம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா தெரிவித்தார்.

"சுகாதாரத் துறையில் உண்மை இல்லை. கடந்த காலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜனாஸா எரிப்பின் போது, ஜனாஸாக்களை புதைக்கலாம் என தீர்மானிக்கப்பட்ட போதிலும் கூட, சுகாதாரத் துறைக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர், அதனை செய்ய விடாது சிறிய குழந்தைகளைக்கூட எரித்தார். இந்தச் சாபத்தையே நாடுதற்போது அனுபவித்து வருவதாகவும்" அதாவுல்லா கூறினார்.