‘C Rugby’ நவம்பர் 12ஆம் திகதி ஆரம்பம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 7-a-side 'C Rugby’ Tag Rugby போட்டி, கடந்த ஆண்டு பாடசாலை ரக்பி நட்சத்திரங்களை ஈர்ப்பதுடன், அவர்களின் சகோதரி பாடசாலைகளின் சக வீராங்கணைகளுடன் ஒன்றிணைந்து விளையாடவுள்ளது, இந்தப் போட்டி லொங்டன் பிளேஸில் உள்ள CR&FC மைதானத்தில் அன்றைய நாள் முழுவதும் நடைபெறவுள்ளது.
மேலும், Link, Magic Box Mixup, Slipping Chairs மற்றும் Rugrats மற்றும் நாட்டின் சில சிறந்த DJs உள்ளிட்ட பிரபலமான உள்ளூர் வர்த்தக நாமங்களுடன் தெரு உணவு, குழந்தைகளுக்கான விளையாடும் பகுதி மற்றும் இசையுடன் இந்த நிகழ்வு திருவிழா சூழலை உருவாக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியானது நவம்பர் 12 ஆம் திகதி சனிக்கிழமை மதியம் 2 மணி முதல் நள்ளிரவு வரை நடைபெறும். இது பாடசாலைகளில் இருந்து பழைய நண்பர்களை மீண்டும் இணைக்கும் அதிரடி ரக்பி மற்றும் பொழுதுபோக்குடன் ஒரு பொழுதுபோக்கு நிறைந்த நாளை உறுதியளிக்கிறது.
இரண்டு மைதானங்களில் விளையாடப்படும் மூன்று நட்புறவு போட்டிகள் உட்பட மொத்தம் 44 போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டிகள் இரவு 8.30 மணிக்குத் திட்டமிடப்பட்டு Plate Finals மற்றும் Cup Final இறுதிப் போட்டிகள் அதன் பின்னர் நடைபெறும்.
சகோதர, சகோதரி பாடசாலைகளை ஒரே மைதானத்தில் ஒன்றிணைத்து, நட்பைப் பகிர்ந்து கொள்ளவும், ஆச்சரியமான ஆண்டுகளை மீண்டும் ஒன்றிணைக்கவும், ரக்பி, இசை மற்றும் பொழுதுபோக்கு வினோதம் நிறைந்த நிகழ்ச்சிகளை முழு குடும்பத்திற்கும் அனுபவிக்கும் முதல் போட்டியாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் சகோதர/சகோதரி பாடசாலைகளான றோயல்/விசாகா, இசிபதன/புனித போல்ஸ், புனித ஜோசப்/செயின்ட் பிரிட்ஜெட்ஸ், கிங்ஸ்வூட்/பெண்கள் உயர்நிலைப் பாடசாலை கண்டி, வெஸ்லி/மெதடிஸ்ட், டி.எஸ். சேனநாயக்க/சிறிமாவோ பண்டாரநாயக்க, ஆனந்த/சகோதரர் பாடசாலைகளைச் சேர்ந்த 16 ஒன்றிணைந்த அணிகள் பங்குபற்றவுள்ளன.
மியூசியஸ், டிரினிட்டி/ஹில்வுட் மற்றும் பெண்கள், எஸ் தோமஸ்/பிஷப், புனித அந்தோனியார்/குட் ஷெப்பர்ட் கான்வென்ட் கண்டி, புனித சில்வெஸ்டர்/புனித அந்தோனியார் பெண்கள் பள்ளி, தர்மராஜா/மகாமாயா, புனித பெனடிக்ட்/குட் ஷெப்பர்ட் கான்வென்ட் மற்றும் வித்யார்த்தா/புஷ்பதான பெண்கள் பாடசாலை ஆகிய அணிகள் பங்குபற்றுகின்றன.
ஒவ்வொரு அணிக்கும் 25 வயதுக்கு மேற்பட்ட இரண்டு வீரர்களும், 35 வயதுக்கு மேற்பட்ட மூன்று வீரர்களும், பெண்கள் பாடசாலையில் இருந்து இரண்டு பெண் வீராங்கனைகளும் ஆண்கள் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இந்தக் கலவையானது வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் ஒன்றிணைவதை உறுதிசெய்கிறது மற்றும் அணிகளைப் பதிவுசெய்வதற்கான பழைய நண்பர்களின் எதிர்பார்ப்பும் உற்சாகமும் இந்த நிகழ்வுக்கு பெரும் நம்பிக்கையைச் சேர்க்கின்றன.
இசிபதன கல்லூரி முன்னாள் ரக்பி வீரரும் மற்றும் CR&FC ரக்பி வீரரும், புகழ்பெற்ற ரக்பி நடுவருமான டில்ரோய் பெர்னாண்டோ தலைமையில் AGOAL இன்டர்நேஷனல் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
AGOAL இன்டர்நேஷனல் இந்த போட்டியை இதற்கு முன்பு ஆறு தடவை ஏற்பாடு செய்துள்ளது. கடந்த 2019 ஆண்டு இடம் பெற்ற போட்டியில் Science College சாம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)