காட்டு யானை - மனித முரண்பாடுகள்
ஹம்தா லதீப் - நேகம
முரண்டுபாடு எனும் போது குறிப்பிட்டவொரு மானுட சமூகத்திற்குள் ஏற்படக்கூடிய மோதல் நிலை என்று மட்டுப்படுத்த முடியாது மாறாக இயற்கைச் சூழலில் வனவிலங்குளுக்கும் மனிதர்களுக்குமிடையில் ஏற்படும் மோதல்களையும் குறிப்பிடலாம்.
அதிலும் குறிப்பாக எமது நாட்டைப் பொருத்தமட்டில் காட்டு யானை மனிதர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் காலத்திற்குக் காலம் அதிகரித்துச் செல்வதாக ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
யானை - மனித மோதலினால் உலகில் அதிக எண்ணிக்ககையிலான யானைகள் இறக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய பாராளுமன்ற கோப் குழுவின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யானை – மனித மோதல்களுக்கு முழுமையான தீர்வு காண்பதில் இலங்கை இன்னும் முழுமையாக வெற்றி பெறவில்லை. இலங்கையில் வருடாந்தம் யானை – மனித மோதல்களினால் 271 யானைகளும் 85 மனிதர்களும் இறப்பதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல பயிர்ச்சேதங்கள் மற்றும் சொத்துச் சேதம் போன்றவை கணக்குகளிற்கும் அப்பாற்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தினால் நடாத்தப்ட்ட காட்டு யானைகள் தொகை மதிப்பீட்டிற்கு இணங்க காட்டு யானைகளின் அடர்த்தி 5,879 ஆக அறியப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக இலங்கையில் அதிகம் யானைகளின் பரம்பலுடைய மாகாணமாக வட மத்திய மாகாணம் அடையாளங் காணப்பட்டுள்ளது. அந்த வகையிலே விவசாயத்தை ஜீவனோபாயமாகக் கொண்டுள்ள கல்னேவ பிரதேச சபைக்குட்பட்ட நேகம கிராமத்திலும் காட்டு யானை – மனித முரண்பாடுகள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது.
குளங்களை மையமாகக் கொண்டு இங்கு நெற்பயிர்ச்சை மற்றும் சேனைப் பயிர்ச்செய்கையினை மக்கள் மேற்கொள்கின்றார். இருந்த போதிலும் கடந்த சில வருடங்களாக காட்டு யானைகளினது அட்டகாசங்களினால் பயிர்ச் செய்கைகளில் பாதிப்புக்களை வருடா வருடம் சந்தித்து வரும் துர்பாக்கிய நிலைக்கு இக்கிராம விவசாயிகள் உட்பட்டுள்ளனர்.
மேலும் அக்கிராமம் உள்ளிட்ட இதனைச் சூழவுள்ள அயல் கிராமங்களிலும் காட்டு யானைகளினால் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் பதிவாகியுள்ளதை அவதானிக்கலாம். இவ்விடயம் தொர்பாக பாதிக்கப்பட்டோரது கருத்துக்கள் மற்றும் மனநிலைகள் கட்டாயமாகப்பதிவு செய்யப்படுதல் வேண்டும்.
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நேகம பிரதேசத்தில் காடடுயானை தாக்குதல்களுக்கு இலக்காகி காயமடைந்த நபரிடம் வினவப்பட்ட போது, "கல்னேவ நகரிற்குச் செல்வதற்கான பாதையில் காலை வேளையில் தனது துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது வழியில் காட்டு யானையின் தாக்குதலிற்கு இலக்காகி பலத்த காயமடைந்ததாகவும் பிரதேசவாசிகளே தன்னை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும்" குறிப்பிட்டார்.
மேலும் தான் காயமடைந்த காலப் பகுதியில் கிராமசேவ அலுவலகர் தன்னைப் பார்வையிட வருகை தந்ததாகவும் குறிப்பிட்டார். அதேபோல வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்ததாகவும் காட்டு யானைத் தாக்குதலிற்கு உள்ளானோர்களுக்கு இழப்பீடாக மானியங்கள் வழங்கப்படும் என்று கூறியதாகவும் அம்மானியத்தினைப்பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பப்படிவமொன்று வழங்கப்பட்டு அது புரணப்படுத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட போதும் அதுகுறித்த எந்தவொரு பதில்களும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டதோடு விவசாயத்தை ஜீவனோபாயமாகக் கொண்ட தான் கடந்த மூன்று மாதமாக வருமானத்தை இழந்த நிலையில் வீட்டிலே இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
காட்டு யானைகளினால் இக்கிராமத்தில் செய்கை பண்ணப்படும் சேனைப்பயிர்கள் மற்றும் தென்னை மரங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருத்துத் தெரிவிக்கையில்,
"கடந்த பத்து வருட காலப் பகுதிக்குள் காட்டு யானைகளினால் அதிக சேதங்கள் விளைவிக்கப்படுவதாகவும் இதனால் இராக்காலங்களில் தொடர்ச்சியாக தாம் காவலுக்காக சிறு கொட்டில்கள் அமைத்துத் தங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் ஏதேனும் காரணத்தினால் ஒரு நாளைக்காவது இராக்காவலுக்குச் செல்ல முடியாமல் போகும் சந்தர்ப்பத்தில் காட்டு யானைகளினால் தங்களது பயிர்கள் சேதப்படுத்தப்பட்டு அத்தனை நாள் உழைப்பும் ஒரு நாளில் அழிவடைவதாகவும் கவலை தெரிவித்தனர்.
குறிப்பாக நீண்ட காலத்திற்கு பயன்தரக்கூடிய தென்னை மரங்களும் காட்டு யானைகளினால் சேதப்படுத்தப்படுவதானால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் பொருளாதார ரீதியில் தாம் மேலும் கீழ் நோக்கித் தள்ளப்படுவதாகவும் இது குறித்த முறைபாடுகள் முன்வைக்கப்பட்டு இருந்தாலும் கூட இது வரையிலும் எந்த வொரு நடவடிக்கைகளும் முறையாக முன்னெடுக்கப்படவில்லையென்றும் குறிப்பிட்டனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது பொதுமக்களுக்கான அசௌகரியங்களும் அதிருப்தி நிலைப்பாடுகளும் காணப்படும் அதேவேளை இது தொடர்பான வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் பொதுவான அபிப்பிராயங்கள் ஆராயப்பட்ட போது காட்டு யானை – மனித முரண்பாடுகள் எமது நாட்டில் சுமார் 60 வருடகால வரலாற்றினை உள்ளடக்கியதாகக் காணப்படுவதாகவும் யானைகள் இறப்பு விகிதத்தில் எமது நாடு இரண்டாவதாக பார்க்கப்படுவதாகவும் சிங்களச் செய்தித்தாளொன்றின் படி அறியமுடிகிறது.
அதிலும் குறிப்பாக கடந்த சில வருடங்களை அண்மித்த கணக்கெடுப்புகளின் படி வருடாந்தம் 200 இற்கு மேற்பட்ட யானைகள் இறப்பதாகவும் குறிப்பாக 60 சதம் ஆன யானைகள் மனித நடவடிக்கைகளினால் இறப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நேகம கிராமத்திலும் அதனைச் சூழவுள்ள அயல் கிராமங்களிலும் கடந்த சில வருடங்களில் ஐந்து யானைகளின் இறப்பு பதியப்பட்டுள்ளது. அதனடிப்படையிலே புகையிரத்தில் மோதுண்டு மூன்று யானைகளும் வனப் பகுதியில் இரண்டு யானைகளும் இறந்ததாகவும் அறிய முடிகிறது.
நீண்ட காலமாக நிலவிரும் காட்டு யானை – மனித முரண்பாடுகளிற்குத் தீர்வாக மின்சார யானை வேலிகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது. மேலும் பொதுமக்களின் சில செயற்பாடுகளும் யானை – மனித முரண்பாடுகளுக்குக் காரணமாகிறது அந்த வகையிலே வனப் பிரதேசங்களை குடியிருப்புகளாகவும் பயிர்ச்செய்கை நிலங்களாகவும் மாற்றுதல் கட்டிடங்களை அமைப்பதற்காக
காட்டிலுள்ள மரங்களை வெட்டுதல் மற்றும் யானைகளினது போக்குவரத்து வழிகளை மறத்து கட்டிடங்கள் அமைத்தல் போன்ற சில செயற்பாடுகளைக் குறிப்பிட்டுக் கூறலாம். எவ்வாயாயினும் ஆசிய யானை இனங்களின் அழிவானது மிகவும் அதிகரித்து வரும் இந்தச் சூழ்நிலையில் இவற்றிற்கான மாற்று வழிகளைத் தேடுவதென்பது மிக முக்கியமானவொன்றாகும் என இது தொடர்பான சிங்களச் செய்திப் பத்திரிகையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கிராமத்தில் நிலவக்கூடிய காட்டு யானைகள் - மனித முரண்பாடுகளுக்கான காரணங்களை ஆராயும் போது மக்களின் சில செயற்பாடுகள் போலவே காட்டு யானைகளின் நடத்தைகளும் காரணமாகும் அந்த வகையிலே வனஜீவராசிகளுக்கான பொறுப்பதிகாரிகள் யானைகளை சரியான முறையில் வழிப்படுத்துவதோடு மக்களும் இம்முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு எளிமையான வழிமுயைகளை கையாள வேண்டும்.
அந்த வகையிலே இன்றைய காலத்தில் காட்டு யானை – மனித முரண்பாடுகளை எவ்வாறு குறைத்துக் கொள்ளலாம் என்ற ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு அவை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு அவை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.
அவ்வாறான நடவடிக்கைகளை கைகொள்ளுதல் வேண்டும். அந்த வகையிலே குறிப்பாக காட்டு யானைகளின் அத்துமீறல்களுக்கான பிரதானமான காரணம் காடுகளில் அவற்றிற்கான உணவுத் தேவைகளைப் புர்த்தி செய்து கொள்ள முடியாமல் போவதாகும்.
குறிப்பாக ஒரு தங்களுக்கான உணவினைப் பெற வேண்டும். ஆனால் இன்று காடுகளில் யானைகளினது உணவிற்குத் தகாத தாவரங்கள் வளர்ந்துள்ளதனால் யானைகளின் உணவாகக் காரணப்படும் புற்கள், புதர்கள் போன்றவையின் செறிவு குறைவடைந்துள்ளது.
அவ்வாறான நிலையில் யானைகள் கிராமங்களிற்குள் பிரவேசிப்பதை தடுக்கமுடியாது. ஆகவே அவற்றிற்கான மாற்று வழிமுறையாக வனங்களை அடத்தியாக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செயற்படலாம். இதன் மூலம் யானைகளின் உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படுவதோடு வளிமண்டலத்திற்காக ஒட்சிசன் - காபனீரொட்சைட்டு சமனிலையும் பேணப்படும்.
காட்டு யானைகளது பயணப் பாதை பற்றிய இரகசியங்கள் சுற்று சுவாரஸ்யமானவை
தான் யானைகளைப் பொறுத்த மட்டில் அவை தமது வழித்தோன்றல்களினது சுவடுகளைப் பின்பற்றியே தமது பயணிப்பதாக விலங்கியல் சார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது காட்டு யானைகளின் வழித்தடங்களில் காணப்படும் தடைகள அகற்றுவதனூடாகவும் யானை – மனித முரண்பாடுகளை இழிவாக்க முடியும். இதனால் யானைகளின் பாதைகளில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை அமைக்காதிருத்தல் மற்றும் குடியிருப்புக் கட்டிடங்கள் அல்லது தொழிற்சாலைகள் அமைக்கும் முன் அது தொடர்பான அதிகாரிகளிடம் தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பெறுதல் போன்ற நடைமுறைகளைக் கையாளலாம். மேலும் யானைகளது பயணப் பாதை மாற்றமடைவதால் அவற்றின் உடல் ஆரோக்கியத்திலும் சில பாதிப்புகள் அமைப்பினரும் குறிப்பிட்டுள்ளனர்.
இவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது காட்டு யானைகளினது பயணப்பாதை தொர்பாக கூடுதல் கரிசனை எடுக்கப்பட வேண்டும். எனவே அதற்கான நீண்ட கால வேலைத்திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்.
அதாவது காட்டு யானைகள் மாறும் இடங்களில் கடவைகள் அமைத்தல் மற்றும் அவற்றின் பாதைகளில் இரு பக்கங்களும் மரங்களை நட்டு அவற்றின் பாதைகளை வேறாக இனங்காட்டல் போன்ற நீண்ட கால உழைப்பினை முதலிடலாம்.
காடுகளை அண்டிய குடியிருப்பு பிரதேசங்களில் யானைகள் ஊருக்குள் உட்புகாதவண்ணம் அவற்றை விரட்டுவதற்கு சிறு கொடடில்கள் அமைத்து அனுபவம் வாய்ந்தவர்களை காவலிங்காக நியமித்தல் போன்ற எளிய நடைமுறைகளையும் கையாள முடியும் மேலும் யானைகள் அதிகம் நடமாடும் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடங்களை வழங்குதல் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதாரங்களை அமைத்துக் கொள்வதற்கு உதவுதல் போன்ற செயற்பாடுகளையும் மேற்கொள்ளலாம் மேலும் யானைகளினை முறையாக முகாமைத்துவம் செய்தல்.
அதாவது பருவத்திற்கேற்றவாறு நெற்பயிர்ச் செய்கை பண்ணப்படும் காலங்களில் வனவிலங்குகள் அதிகாரிகள் மற்றும் பிரதேச விவசாயிகள் சேர்ந்து அவற்றை காட்டிற்கு அனுப்புவதோடு அறுவடை முடிந்ததன் பின் வயல் நிலங்களில் யானைகளை வழிப்படுத்தலாம். இந்நடைமுறைகள் எமது நாட்டில் சில பகுதிகளில் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கவோர் விடயமாகும்.
காட்டு யானை – மனித முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான மற்றுமோர் நவீன உத்திமுறையாக யானை வேலி அமைக்கும் செயற்பாடுகளைக் குறிப்பிடலாம். நாடளாவிய ரீதியில் யானை வேலி அமைப்பதற்காக 3,000 மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அதேவேளை இந்த வருடத்தில் மாத்திரம் 1,500 மஅ தூரத்திற்கு யானை வேலி அமைப்பதற்கு அரசினால் திட்டமிடப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் யானை வேலிகளினால் எதிர்பார்த்தளவான பயன்களை இது வரை பெற முடியவில்லை. இதற்கான பிரதான காரணம் அவை காட்டின் எல்லையை அண்மித்து அமைக்கப்படுவதனால் வனத்திற்குள் காணப்படக்கூடிய அதே சூழல் அமைவு மின்சார வேலிகளுக்கு அப்பாற்பட்ட பிரதேசங்களிலும் காணப்படுவதனால் காட்டு யானைகளிற்கு அந்தச் சூழல் ஒன்று தான் என்ற எண்ணப்பாடுகள் தோன்றுவதனால் அவை வேலிகளை உடைத்துக் கொண்டு உள்வருவதையும் அவதானிக்கலாம்.
இதற்கு மாற்று வழியாக வேலிகளுக்கு அப்பாற்பட்ட பிரதேச எல்லையின் கூழல் அமைவில் மாற்றங்களை ஏற்படுத்துவது காட்டாயமாகும். மேலும் பயிர்ச் செய்கை பிரதேசங்களுக்கும் யானைகளின் வாழிடங்களுக்குமிடையில் குறிப்பிட்டளவிலான நிலப் பிரதேசத்தை பேணுதல் மேலும் யானைகளுக்கான வாழிப்பற்றாக்குறைகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் செயற்கையான வனங்களை உருவாக்கி அவற்றை பராமரிக்கலாம்.
இவ்வாறான செயற்பாடுகள் எமது நாட்டில் சில பிராந்தியங்களில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கவோர் விடயமாகும். அதேபோன்று யானைகளை பாதுகாப்பதற்கான அமைப்புகள் மற்றும் நிதியங்களை அரசும் மக்களும் இணைந்து செயற்படுத்தல் வேண்டும். இவவ்வாறான அமைப்புகள் மூலம் காயமடைந்த யானைகளுக்கு சிகிச்சை வழங்குதல் தனித்துவிடப்பட்ட யானைக் குட்டிகளைப் பராமரித்தல் மற்றும் தந்தங்களிற்காக யானைகள் வேட்டையாடப்படுவதற்கு எதிராகச் செயற்படுதல்
போன்ற நடவடிக்கைகளின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும் என வனவிலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் முன்மொழிந்துள்ள விடயங்களாகும். யானைகளினால் பாதிக்கப்பட்டோருக்கான நஷ்டஈடுகளை முறையாக காலதாமதம் இன்றி பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் மேலும் யானைகளை விரட்டுவதற்காக துப்பாக்கிகளைப் பயன்படுத்தாமல் யானை வெடிகளை பயன்படுத்துவதற்கு மக்களை அறிவுறுத்துவதோடு வெடிப்பொருட்களையும் சட்ட ரீதியானப் பெற்றுக்கொடுப்பதற் கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதே போன்று தேசிய வன ஜீவராசிகள் அதிகாரசபையினது முன்மொழிவுகளுக்கு ஏற்ப கஐமிதுரு இலங்கையில் காட்டு யானைகளைப் பேணுதல் மற்றும் முகாமைத்துவம் தொர்பான தேசிய கொள்கைத் திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தல் வேண்டும்.
இவ்வாறான நடைமுறைகளையும் தீர்வுகளையும் அரசும் பொதுமக்களும் ஏற்றச் செயற்படுவதனால் மாத்திரமே இதுவரை காலங்களில் பதிவு செய்யப்பட்ட யானை – மனித முரண்பாடுகளை இழிவளவாக்க முடிவதோடு இரு தரப்பினர்களிடையிலான உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் போன்றவற்றை குறைக்கவும் முடியும் இருந்த போதிலும் காட்டுயானைகள் போன்ற ஐந்தறிவு ஜீன வராசிகள் மீது ஜீவகாருன்யம் காட்டப்படும் சூழலில் இவ்வாறான இழப்புக்களை குறைத்துக்கொள்ள முடியும் என்பது திண்மை.
MWRAF நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட பெண்களுக்கான சமாதான ஊடகவியல் இருநாள் பயிற்சி நெறியினை தொடர்ந்து சமாதான ஊடகவியலின் அடிப்படைகளை கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.
Comments (0)
Facebook Comments (0)