'சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி' இன் வியாபாரத்தினை இடைநிறுத்தல்
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 31(1)ஆம் பிரிவின் நியதிகளுக்கிணங்க சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி இன் வியாபாரத்தினை இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்திருக்கிறது.
தொடர்ச்சியாக மோசமடைந்துவரும் நிதியியல் நிலைமைகளையும் ஆற்றல்வாய்ந்த மீளெழுச்சித் திட்டங்கள் கிடைக்காதிருப்பதனையும் பரிசீலனையில் கொண்டு, நாணயச் சபை 2020 ஜு10லை 13ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் நிதிதொழில் சட்டத்தின் 31(1)ஆம் பிரிவின் நியதிகளில் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி இன் வியாபாரத்தினையும் அதன் தாய்க் கம்பனியான ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டினையும் இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்திருந்ததுடன் வியாபார நடவடிக்கைகளை அவ்வாறு இடைநிறுத்துகின்ற காலம் 2021 ஜனவரி 12ஆம் திகதி வரை நடைமுறையிலிருந்தது.
கம்பனி இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதியில் மூலதனத்தினை உள்ளீடு செய்வதன் மூலம் ஏற்றுக்கொள்ளத்தக்க மீளெழுச்சித் திட்டங்களை வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்தப்பட்ட திகதியிலிருந்து பெரும்பாலும் ஆறு (6) மாதங்கள் முடிவடைந்த பின்னரும் முன்வைக்கத் தவறியதுடன் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் நிதியியல் நிலைமை தொடர்ந்தும் மேலும் மோசமடைந்தது.
சொல்லப்பட்ட இடைநிறுத்தக் காலப்பகுதியில், சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியிற்கு வரவேண்டிய கணிசமான தொகை முக்கியமாக தங்கக் கடன் அறவிடல் ஊடாக சேகரிக்கப்பட்டதுடன் அநேக வைப்பாளர்கள் அவர்களது எஞ்சிய வைப்புக்களை அத்தகைய அறவிடல்களைப் பயன்படுத்தி மீளச்செலுத்துமாறும் கோரினர்.
இதற்கமைய, பொதுமக்களின் நலன்கருதியும் வைப்பாளர்களின் நலன்கருதியும் நாணயச் சபை, எஞ்சியுள்ள வைப்புக்களில் ஐம்பது சதவீதம் (50 சதவீதம்) வரையிலான தொகையினை மீளச்செலுத்தும் நோக்கத்திற்காக மாத்திரம் குறிப்பிட்ட கடுமையான நிபந்தனைகளுக்குட்பட்டு, நாணயச் சபையினால் நியமிக்கப்பட்ட முகாமைத்துவக் குழுவின் மேற்பார்வையின் கீழ், 2021 ஜனவரி 13ஆம் திகதியிலிருந்து மூன்று (3) மாத காலப்பகுதிக்குப் பெயரளவில் வியாபாரத்தினைத் தொடங்குமாறு கட்டளையிட்டது.
2021 மார்ச் இறுதி வரை மீள்கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், எஞ்சியுள்ள வைப்பாளர்களில் தொண்ணூற்று நான்கு சதவீதத்தினருக்கு (94 சதவீதம்) மொத்தமாக 665.6 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டிருந்ததுடன் மிகுதிக் கொடுப்பனவும் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியினால் செய்முறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதேநேரத்தில், நாணயச் சபை இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத்திட்டத்தின் கீழ் உயர்ந்தபட்ச இழப்பீட்டுக் கொடுப்பனவினை 600,000 ரூபாவிலிருந்து 1,100,000 ரூபாவிற்கு 500,000 ரூபாவினால் அதிகரிப்பதற்குத் தீர்மானித்தது.
இத்தீர்மானமானது, இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிதியியல் நிறுவனங்களின் உரிமங்கள் இரத்துக் செய்யப்பட்ட அல்லது இடைநிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் வைப்பாளர்களுக்கு மேலும் நிவாரணம் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ச்சியாக மோசமடைந்துவரும் நிதியியல் நிலைமை, கம்பனியின் கடன் தீராற்றலற்ற நிலமை தீவிரமடைந்து வருவது, ஆற்றல் வாய்ந்த மீளெழுச்சித்திட்டங்கள் கிடைக்காமை, சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் எஞ்சிய வைப்பாளர்களுக்கு இலங்கை வைப்புக் காப்பறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்திலிருந்து 500,000 ரூபாவைக் கொண்ட அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவிற்கு வசதியளிக்க வேண்டிய தேவை என்பனவற்றைப் பரிசீலனையில் கொண்ட நாணயச் சபை, நிதித்தொழில் சட்டத்தின் 31(1)ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளுக்கிணங்க 2021 ஏப்ரல் 12ஆம் திகதி பி.ப. 5.00 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியிற்கு இடைநிறுத்தல் கட்டளையினை வழங்கத் தீர்மானித்தது.
இடைநிறுத்தல் காலப்பகுதியில், முகாமைத்துவக் குழு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் அலுவல்களைத் தொடர்ந்தும் முகாமைப்படுத்தும் என்பதுடன் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் எஞ்சிய வைப்பாளர்களுக்கு இழப்பீட்டின் அதிகரித்த தொகை இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்திலிருந்து மக்கள் வங்கியின் நாடளாவிய கிளை வலையமைப்புக்கு ஊடாகச் செலுத்தப்படும்.
அத்தகைய இழப்பீட்டுக் கொடுப்பனவு தொடங்கும் திகதி சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி வைப்பாளர்களுக்கு கிட்டிய எதிர்காலத்தில் அறியத்தரப்படும். மேலும், சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் மீது எடுக்கப்படுகின்ற மேலதிக ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகள் காலக்கிரமத்தில் அறிவிக்கப்படும்.
சுவர்ணமஹால் நிதியியல் சேர்விஸஸ் பிஎல்சியின் அனைத்துக் கடன்பாட்டாளர்களும் அவர்களது நிலுவையிலுள்ள தொகையினை சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி உரிய நேரத்தில், சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி பெயரின் கீழ் பின்வரும் கணக்கு ஊடாக மாத்திரம் செலுத்துமாறும் நிலுவைகளை மீளச்செலுத்தாமைக்காக அவர்களுக்கெதிராக வழக்குகள் தொடுக்கப்படும் சாத்தியத்தினை தவிர்ப்பதற்காக அனைத்துக் கொடுப்பனவுகளுக்குமான பதிவேடுகளைப் பேணுமாறும் ஆலோசனை வழங்கப்படுகிறார்கள்.
2018 மற்றும் 2019 காலப்பகுதியில் செய்யப்பட்ட 30 சதவீதமான மீள்கொடுப்பனவுகளையும் 2021இல் செய்யப்பட்ட எஞ்சிய வைப்புக்களில் 50 சதவீதம் கொண்ட மீள்கொடுப்பனவுகளையும் இன்னமும் பெறாத வைப்பாளர்கள் சுவர்ணமஹால் நிதியியல் பினான்சியல் பிஎல்சியின் வியாபாரம் இடைநிறுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் தமது மீள்கொடுப்பனவுகளைச் சேகரிக்க பெற்றுக்கொள்ள தகைமையுடையவர்களாவர். மேலதிக விளக்கத்தினைப் பெற கீழுள்ள திணைக்களங்களை தொடர்புகொள்ள முடியும்.
Comments (0)
Facebook Comments (0)