Factum Perspective: இலங்கைக்கான பந்துவீச்சு
சீனத் அயூப்
2022 T20 உலகக் கோப்பை தொடரில் தோல்வியை எதிர்கொண்ட நமீபியாவுடனான இலங்கையின் தொடக்க குழுநிலை மோதலுக்கு முன்னதாக இந்த வார ஆரம்பத்தில் சிம்பாவேக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.
பின்னையதைப் பொருட்படுத்தாமல், தலைவர் தசுன் ஷானக மற்றும் அவரது குழுவினர் கடந்த சில மாதங்களாக, அவர்களின் அனைத்து முக்கிய போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த ஆண்டு ஜூன் - ஜூலையில் நடைபெற்ற ஆறு வார அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டின் நிதியியல் வாய்ப்புகளுக்கு ஊக்கமளித்ததாக விவரிக்கப்படலாம்.
இந்த சுற்றுப்பயணம் பொருளாதாரத்தில் பணத்தை உள்ளிட்டது மட்டுமல்லாமல், "visit Sri Lanka" பிரச்சாரத்தின் ஆரம்பத்தின் மூலம் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வழிமுறையாகவும் பயன்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், சுதந்திரத்திற்குப் பின்னரான மிக மோசமான பொருளாதார நெருக்கடியுடன் போராடும் இலங்கையர்களுக்கு இது வெறும் பணமாக மட்டுமல்லாது, கடினமான காலங்களில் மகிழ்ச்சி, களிப்பு மற்றும் உற்சாகத்தின் ஓர் ஔிக்கீற்றாகும். ஒரு நாள் சர்வதேச (ODI) தொடரின் வெற்றி உட்பட விளையாடிய பத்து போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றதால், இந்த சுற்றுப்பயணம் மில்லியன் கணக்கான இலங்கையர்களின் முகத்தில் ஒரு புன்னகையை ஏற்படுத்தியது.
மிகவும் இக்கட்டான நேரத்தில் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இலங்கை ரசிகர்கள் தங்களது நன்றியை தெரிவிப்பதற்கு தவறவில்லை. இந்த நன்றி தெரிவித்தல் நாட்டிற்கு வருகை தந்த அவுஸ்திரேலிய அணிக்கு நன்றி தெரிவிக்கும் பதாகைகள் மற்றும் அட்டைகளை ரசிகர்கள் ஏந்தியதன் மூலமாக சுற்றுப்பயணம் முழுவதுமாக காணப்பட்டது.
இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கையின் வெற்றிகள் அணி மற்றும் ரசிகர்களுக்கு ஒரு மாதத்திற்கு பின்னர் நடைபெற்ற ஆசிய கோப்பை 2022 க்கு செல்வதற்கு மிகுந்த நம்பிக்கையையும் புதிய பலத்தையும் கொடுத்தது.
ஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மேலும் வலுப்பெறலாம் என்ற நோக்கத்தில், போட்டியை நடத்துவதற்கான உரிமையை இலங்கை பெற்றுள்ளது என்ற செய்தியைத் தொடர்ந்து அதிக உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
அனைத்து இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கையையும் தகர்த்து, ஆசியக் கோப்பை 2022 போட்டி ஆரம்பிப்பதற்கு இரு வாரங்களுக்கு முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (UAE) இடம் மாற்றப்பட்ட அதே நேரத்தில் இலங்கை போட்டியை நடத்துவதற்கான உரிமையை தக்க வைத்துக் கொண்டது.
தீவின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மையால் ஆசிய கிரிக்கெட் சபையின் (ACC) தலைவர் கூறியது போல் ACC இற்கு இந்த "கடினமான" முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எவ்வாறாயினும், ஆசியக் கோப்பை 2022 போட்டி முழுவதும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தக்கவைக்கப்பட்ட போட்டியை நடத்துவதற்கான உரிமைகளை உச்சபட்சமாகப் பயன்படுத்துவதை இலங்கை வீரர்களும் கிரிக்கெட் சபையும் உறுதி செய்தனர். போட்டி முழுவதும், இந்த காரணத்திற்காக நாடு எவ்வாறு பல உத்திகளை பயன்படுத்தியதென்பது தெளிவாக வெளிப்பட்டது.
இந்த உத்திகளில் மிகவும் முக்கியமானது, வீரர்களின் துடுப்பாட்ட மட்டைகளில் #visitSriLanka ஸ்டிக்கர்களைக் காட்சிப்படுத்துவதாகும். அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை கிரிக்கெட் சபை நாட்டின் சீரழிந்து வரும் சுற்றுலாத் துறைக்கு ஆதரவாக இந்த ஸ்டிக்கர்களைப் பயன்படுத்த ACC யிடம் அனுமதி கோரியதுடன், அதே உணர்வை இலங்கை சுற்றுலாத் தூதுவரும் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரருமான சனத் ஜெயசூரியாவும் வெளிப்படுத்தினார்.
ஆசிய கோப்பை 2022 இலங்கைக்கு வெற்றிக் கதையாக தொடர்ந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மிகவும் வேதனையான தோல்வியுடன் போட்டியை ஆரம்பித்தாலும், ஆரம்ப நாட்களில் பின்தங்கியவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டாலும், பங்களாதேஷுக்கு எதிரான 2 விக்கெட் வித்தியாச வெற்றியுடன் தசுன் ஷானக மற்றும் குழுவினர் போட்டியின் அட்டவணையை இலங்கைக்கு சாதகமாக மாற்றினர்.
ஆசியக் கோப்பையில் விளையாடிய மற்றைய எல்லாப் போட்டிகளிலும் வெற்றிபெற்றதன் மூலம் பெரும் மீள்பிரவேசத்துடன் தங்கள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் நெருக்கடியான நாட்டின் மீது பிராந்தியத்தின் அதிகரித்த கவனம் திரும்பியது.
செப்டெம்பர் 11ஆம் திகதி கொண்டாட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியதுடன், இலங்கை அணி 2022 ஆசியக் கோப்பையில் சம்பியனாக வெளிப்பட்டது, இது 8 ஆண்டுகளுக்குப் பிறகான நாட்டிற்கான ஒரு பெரிய கிரிக்கெட் போட்டி வெற்றி 21 மில்லியன் இதயங்களுக்கு மிகவும் தேவையான ஊக்கமாகும்.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆசியக் கோப்பையின் வெற்றிக்கு மேலதிகமாக கயாஞ்சலி அம்ரவன்சா மற்றும் அவரது குழுவினரால் ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் அதே நாளில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த போட்டியில் சிங்கப்பூர் அணிக்கு எதிராக இலங்கை வலைப்பந்து அணி அபார வெற்றி பெற்று வெற்றியை தனதாக்கியது.
செப்டெம்பர் 11 ஆம் திகதி நாட்டிற்கு இன்னும் அதிகமான விடயங்களை வைத்திருக்கின்றது. இலங்கையின் லெஜண்ட்ஸ் அணியானது, இந்தியாவினால் ஆரம்பித்து நடாத்தப்பட்ட உலக வீதி பாதுகாப்புத் தொடர் 2022 இல் அவுஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றதுடன், இலங்கையின் விளையாட்டு நாட்காட்டியில் இந்த திகதியை வரலாற்று நாளாக மாற்றியது.
இந்தியாவில் விளையாடும் இலங்கை லெஜண்ட்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் இலங்கை சுற்றுலாத்துறையின் பிராண்ட் தூதுவரான சனத் ஜெயசூரிய, இலங்கையின் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக இந்தியர்களை இலங்கைக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த விறுவிறுப்பான விளையாட்டு வெற்றிகளுக்குப் பிறகு ஒரு மாத இடைவெளியில் வெற்றியின் இனிமைக்கு மேலும் சுவை சேர்க்கும் வகையில் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பித்தது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 14 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானை பரபரப்பான அரையிறுதியில் தோற்கடித்ததன் மூலம் போட்டியின் இறுதிப் போட்டியில் தனது இடத்தை தக்கவைத்ததுடன், அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு எதிராக எதிர்பாராத தோல்வியை சந்தித்து "இரண்டாம் நிலை" பட்டத்தை கைப்பற்றியது.
இந்த வெற்றிகள் அனைத்தும் நாடு விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல, சந்தேகத்திற்கு இடமின்றி அதன் இறந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை மீள எழுப்புவதில் அதிகரித்த வாய்ப்புகளைப் பெறுவதற்கு உலகின் பிற நாடுகளிடமிருந்து மேலும் மேலும் அங்கீகாரத்தையும் வெளிச்சத்தையும் பெறுவதற்கு வழி வகுத்தது.
டிசம்பரில் நடைபெறவிருக்கும் லங்கா பிரீமியர் லீக் (LPL) வெளிநாட்டு வீரர்களுக்கான வாய்ப்புக்களை வழங்குவதுடன், அதன் சிதைந்த பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த நிச்சயமாக நாட்டுக்கு ஆதரவாக செயற்படும்.
ஜீனத் அயூப் Factum இல் ஆராய்ச்சி மாணவர் என்பதுடன் அவரை zeenath@factum.lk இல் தொடர்பு கொள்ளலாம். Factum என்பது ஆசியாவை மையமாக கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.
Comments (0)
Facebook Comments (0)