ஊரடங்காவிட்டால் ஊரடங்கு தொடரும்! நம்மை நாம் காப்போம்!!!
கியாஸ் ஏ. புஹாரி
பலத்த நிபந்தனைகளுடன் 23 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு!
கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில்,
- ஊரடங்கு தளர்வு இல்லை!
- அத்தியவசிய சேவைக்கு மாத்திரம் அனுமதி!
- தனியார் துறை காலை 10 மணிக்கு சேவைக்காக திறக்க அனுமதி!
- பொதுமக்கள் தேவையின்றி வீதிளுக்கு வருவதையும், வேறு பல இடங்களில் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.
- அடையாள அட்டை முறைமையிலேயே வெளிச் செல்ல அனுமதி!
- பிற மாவட்டங்களில் இருந்து வருவோருக்கு கடும் சட்டங்கள்!
- அனுமதி பெற்றவர்கள் மாத்திரமே அரச பஸ், ரயில்களில் பயணிக்க அனுமதி!
ஒவ்வொரு நாளும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்!
இப்படி நிறை சட்ட விதிமுறைகளுடன் ஊரடங்கு தளர்வும், கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் சேவைகள் ஆரம்பமும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சுகாதார அமைச்சரின் கருத்துக்கிணங்க நாட்டின் 23 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வும், இடர் வலயங்களில் தொழில் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதுமானது முழுமையாக நாட்டை திறந்து விட்டதாக அர்த்தம் அல்ல!
அதிலும் குறிப்பாக இக் காலகட்டத்தில் இவ்வாறான தளர்வு எமது சமூகத்தில் பாரிய செல்வாக்குச் செலுத்தும் விடயமாக அமையும். ஏனெனில் மற்றய மதத்தவர்களின் பண்டிகைக் காலங்கள் கடந்து சென்ற நிலையில், எமது பண்டிகைக் காலத்தினை எதிர்பார்த்து நிற்கின்ற எமது சமூகத்தவர்கள் நிதானமாக செயற்பட வேண்டிய தேவையுள்ளது.
அதாவது, சில விடயங்களை விபரமாகக் கூற முடியாது, இருந்தாலும் விளக்கம் சொல்வது சிறந்தது. “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” எனும் தொனியில் “வழியால போனத தலையால அள்ளிப்போட்ட சீலம்” ஆக்கி விடாதீர்கள்.
நெருக்கடியான இக் காலத்தில் முண்டியடித்துக் கொண்டு கடைகள், கூட்டங்கள் என கூடாதீர்கள். சில வேளை குறித்த ஒரு பகுதியினரை சுட்டிக்காட்டி இவர்களால்தான் பரவியது என சுட்டிக்காட்டி தனிமைப்படுத்தப்படக்கூடும்.
அத்துடன், நமக்களிக்கப்பட்ட சலுகைகளை உரிமைக்கேடயங்கள் போன்று உதசீனப்படுத்தி குறித்த ஒரு சமூகத்தை மாத்திரம் விரல் சுட்ட வைக்காதீர்கள். ‘செய்வன திருந்தச் செய்’ பிற மத அமைதிகளும், நம் மத கெடிபிடிகளும் எம்மை கைதிகளாக்கி விடலாம் இக் காலத்தை பயன்படுத்துவோம்!.
சந்தர்ப்பமோ அல்லது வீண் பழியோ குறித்த சமூகத்தின் மீது விழுந்தால் ‘வளர்த்த கடா மார்பில்’ பாய்ந்த கதை போல் ஆகிவிடும். பித்தம் தலைக்கேறிய பின் இனவாத வித்து இதுவென பேசி வேலையில்லை.
எனவே, எது எப்படியோ! இது உலகை உலுக்கும் நோய். இதற்கு எமது நாடு விதித்துள்ள விதிமுறைகளுக்கு நாமும் கட்டுப்படுவதே சிறப்பு! ஏனென்றால் ‘நான் ஒரு இலங்கையன்’ என்ற உணர்வு நம் ஒவ்வொருவர் மனதிலும் பிறக்க வேண்டும்.
இந்தக் கட்டுரையில் நிறைய அர்த்தங்கள் உள்ளன. கூர்மையாக சிந்தியுங்கள் புதிராக புரியும்! சொல்லி உணர்த்த வேண்டியதல்ல. உணர்ந்து நடக்க வேண்டிய பொற்காலம் இது!
Comments (0)
Facebook Comments (0)