அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் உள்ளடக்கப்படாமை குறித்து முஸ்லிம் லீக் வாலிப முன்னணி ஜனாதிபதிக்கு கடிதம்

அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் உள்ளடக்கப்படாமை குறித்து முஸ்லிம் லீக் வாலிப முன்னணி ஜனாதிபதிக்கு கடிதம்

புதிய அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த ஒருவர் உள்ளடக்கப்படாமை தொடர்பில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளது. 

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நிகழ்ந்துள்ள இந்த விடயம் தொடர்பில் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"புதிய அமைச்சரவையில் எமது முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்களை பிரதிபலிப்பதற்கான எமது பிரதிநிதியொருவர் இல்லாதிருப்பதனால் எமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உங்களது அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கு உள்ள வாய்ப்பு இல்லாமல் போகிறது என்பதனை கவலையுடன் உங்களிடம் முன்வைக்கிறோம்.

கடந்த 2024.11.14ஆம் திகதி நடைபெற்ற 10 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் நீங்கள் தலைமை வகிக்கும் அணி அனைத்து மக்களினதும் ஆதரவுடன் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து உங்களால் நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையின் எதிர்காலச் செயற்பாடுகள் சகல வழிகளிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு இந்த நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காகப் பணியாற்றத் கூடிய அமைச்சரவையாக மாற வேண்டும் என நாங்கள் மனதாரப் பிரார்த்திக்கிறோம்.

எனினும், இந்த அமைச்சரவையில் எமது முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்களை பிரதிபலிப்பதற்கான எமது பிரதிநிதியொருவர் இல்லாதிருப்பதனால் எமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உங்களது அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கு உள்ள வாய்ப்பு இல்லாமல் போகிறது என்பதனை கவலையுடன் உங்களிடம் முன்வைக்கிறோம்.

ஜனாதிபதி இந்த விடயத்தில் கரிசனை காட்டி துரிதமாக முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்காக எமது சமூகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.