மைத்ரி மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சிபாரிசு
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று (23) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தனவிடம் கையளிக்கப்பட்டது.
இதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் வாசிப்பிற்காக குறித்த அறிக்கை பாராளுமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த அறிக்கையின் சிபாரிசுகளை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்ணான்டோ மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் டுவிட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
குறித்த சிபாரிசிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரை அறிவுறுத்தியுள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக செயற்பட்ட காலப் பகுதியிலேயே இந்த விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)