புவியியற் துறையில் கலாநிதி பட்டம் பெற்றார் ஸித்தி ரபீக்கா அமீர்தீன்
தென் கிழக்கு பல்கலைக்கழ சிரேஷ்ட விரிவுரையாளரான ஸித்தி ரபீக்கா அமீர்தீன், புவியியற் துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.
தென் மாகாணத்தின் காலி மாநகரில் அமைந்துள்ள 'கட்டுகொடை' எனும் சிறிய கிராமத்தில் 1964.08.04 இல் மொஹமட் சபீக் மற்றும் றெலினா உம்மா ஆகியோருக்கு மூத்த புதல்வியாக பிறந்த இவர், காலி - உஸ்வதுன் ஹஸனா மகளிர் மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதரண தரம் வரை கல்வி கற்று பின், காலி - மல்ஹருஸல்ஹியா தேசிய பாடசாலையில் க.பொ.த. உயர் தரத்தில் கலைப் பிரிவில் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்.
1984 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய இவர், 1991 இல் கலைமானி சிறப்புப் பட்டத்தினை புவியியல் துறையில் சிறப்புத் தேர்ச்சியுடன் பெற்றுக் கொண்டதோடு, 1991 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையளராக கடமையாற்றியதுடன், 2003 இல் அதே பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக கடமையாற்றியதுடன் 1996 இல்; தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிரந்தர நியமனம் பெற்று இதுவரை சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றி வருகிறார்.
2019 இல் தனது கலாநிதிப் பட்டத்தினை யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் புவியியற் துறையில் முடித்துக்கொண்ட இவர், அண்மையில் நடைபெற்று முடிந்த யாழ் பல்கலையின் 35வது பொதுப் பட்டமளிப்பு விழாவில் கலாநிதிப் பட்டத்தினை பெற்றுக்கொண்டார்.
-கபூர் நிப்றாஸ்-
Comments (0)
Facebook Comments (0)