பள்ளேகமயில் ஒரு நாள் ஊடக கருத்தரங்கு

பள்ளேகமயில் ஒரு நாள் ஊடக கருத்தரங்கு

பள்ளேகம கல்வி மன்றமும், தெல்தோட்டை ஊடக மன்றமும் இணைந்து உடபிடிய அல் ஹுஸ்னா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடக கருத்தரங்கு கடந்த 22ஆம் திகதி இடம்பெற்றது. 

இதில் வளவாளர்களாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல் அதிகாரி எஸ்.ஏ.எம். பவாஸ் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், பிரபல அறிவிப்பாளருமான சி.எம்.எம். சுபைர் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

கருத்தரங்கின் இறுதியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பள்ளேகம கல்வி மன்ற உறுப்பினர்கள், பிரபல சமூக சேவையாளர்    கலாநிதி முனீர் ஸாதிக் (காஸிபி) உட்பட பலர் கலந்து கொண்டனர்.