மலைநாட்டு திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்

மலைநாட்டு திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்

மலைநாட்டு திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சட்ட மூலத்திலுள்ள சில பகுதிகளை நீக்  சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கும் நேற்று (18) திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1997ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க திருமணப் பதிவு செய்தல் (திருத்தப்பட்ட சட்டம்) மூலம் திருமணப் பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் 22ஆம் உறுப்புரை திருத்தப்பட்டுள்ளதுடன், அதற்கமைய, சிறு வயதுத் திருமணங்களுக்கு பெற்றோரின் விருப்பு ஒப்புதல் அவசியமென குறித்துரைக்கப்பட்டுள்ளது.

குணரத்னம் எதிர் பதிவாளர் நாயகம் வழக்குத் தீர்ப்புக்கமைய 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு இலங்கையில் சட்டபூர்வ திருமணத்தைப் பதிவு செய்வதற்கு இயலாது.

அவ்வாறான திருமணத்திற்கு பெற்றாரின் விருப்பு ஒப்புதல் இருத்தல் சட்டத்தின் முன் செல்லுபடியற்றது. குறித்த வழக்குத் தீர்ப்புக்கமைய தகுதி வாய்ந்த அதிகாரம் படைத்த ஒருவருடைய உடன்பாட்டுடன் சிறு வயதுக்காரர்களின் திருமணத்திற்கு அதிகாரம் வழங்கும் சட்டங்களுக்கு ஏற்புடைய உறுப்புரைகளை முடிவுறுத்த வேண்டியுள்ளது.

அதற்கமைய, தற்போது முஸ்லிம் திருமண மற்றும் விவகாரத்து சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு இணையாக மலைநாட்டு திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்திற்கு ஏற்புடைய இசைவுகளை நீக்குவதற்கும், அதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.