'செய்கடமை': கொவிட் - 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் செலவு விபரங்கள்

'செய்கடமை': கொவிட் - 19 சுகாதார மற்றும் சமூக  பாதுகாப்பு நிதியத்தின் செலவு விபரங்கள்

தனிப்பட்ட மற்றும் நிறுவன ரீதியான அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘செய்கடமை’ கொவிட் - 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு கிடைத்துள்ள பங்களிப்பு

2020, ஒக்ரோபர் 31ஆம் திகதி வரையும் -

166 கோடி 83 இலட்சம் 79 ஆயிரத்து 121 ரூபாய்கள் 74 சதங்கள் ஆகும்.

இந்த தொகையில், நேற்று, 2020. 11. 10 வரை -

40 கோடி 21 இலட்சம் 90 ஆயிரத்து 701 ரூபாய்கள் கீழே காட்டப்பட்டுள்ளவாறு ஒதுக்கப்பட்டுள்ளது:

செயற்பாடு:

PCR பரிசோதனை -

ஒதுக்கப்பட்ட நிதி (ரூபாய்கள்): 100,000,000.00,
இதுவரையான செலவு (ரூபாய்கள்): 42,605,812.00,
செயற்படுத்திய நிறுவனம்: சுகாதார அமைச்சு.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆலோசனை நிகழ்ச்சித்திட்டம் -

ஒதுக்கப்பட்ட நிதி (ரூபாய்கள்): 100,000,000.00
இதுவரையான செலவு (ரூபாய்கள்):24,364,800.00
செயற்படுத்திய நிறுவனம்: சுகாதார அமைச்சு

தனிமைப்படுத்தல் வசதிகள் -

ஒதுக்கப்பட்ட நிதி (ரூபாய்கள்): 86,528,701.00
இதுவரையான செலவு (ரூபாய்கள்): 38,031,065.00
செயற்படுத்திய நிறுவனம்: சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பரிசோதனைக் கூட வசதிகள் -
ஒதுக்கப்பட்ட நிதி (ரூபாய்கள்): 112,140,000.00
இதுவரையான செலவு (ரூபாய்கள்): தகவல் திரட்டப்படுகின்றது
செயற்படுத்திய நிறுவனம்: சுகாதார அமைச்சு

Rapid Test Kit மேம்படுத்தல் -

ஒதுக்கப்பட்ட நிதி (ரூபாய்கள்): 3,522,000.00
இதுவரையான செலவு (ரூபாய்கள்): தகவல் திரட்டப்படுகின்றது
செயற்படுத்திய நிறுவனம்: இலங்கை நனோ தொழிநுட்ப நிறுவனம்

முகாமைத்துவ குழுவினால் அனுமதியளிக்கப்பட்ட செயற்பாடுகள்:

இந்த ஆண்டு மார்ச் 18ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஏற்ப 2020. 03. 23 ஆம் திகதி மேற்படிநிதியம் நிறுவப்பட்டிருந்தது.

இந்நிதியத்தின் முகாமைத்துவம்: 

நிர்வாகம், நிதி மற்றும் வங்கித் துறையில் மிகுந்த திறமை வாய்ந்த தொழிற்துறை வல்லுனர்களைக் கொண்ட சபை ஒன்றினால் மேற்கொள்ளப்படுகின்றது. அமைச்சுக்களின் செயலாளர்கள், சுகாதாரப் பணிப்பாளர் நாயகம், கணக்காய்வு நிபுணர்கள் மற்றும் வங்கித் தலைவர்கள் போன்றோர் இதன் முகாமைத்துவ சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

முகாமைத்துவ சபையின் தலைவராக மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யு. டீ. லக்ஷ்மன் அவர்கள் செயற்படுகின்றார். கொவிட் நோய்த்தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக ஏதேனும் ஒரு நிறுவனத்திற்குப் பணம் தேவைப்படும் போது, குழுவின் அனுமதியுடன், அந்த நிதி குறித்த நிறுவனத்தினால் அரசாங்க கொள்முதல் விதிமுறைகளின் படி செலவிடப்படுகின்றது.

பின்னர், நிதியத்தின் ஊடாக அந்தநிதி  மீள்நிரப்பல் செய்யப்படுகின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குழுவினால் நேரடி கொள்வனவு அல்லது நேரடி செலவுகள் செய்யப்படுவதில்லை.

நிதியத்தின் கணக்கு நடவடிக்கைகள் ஜனாதிபதி செயலகத்தின் கணக்குப் பிரிவினால் மேற்கொள்ளப்படுவதுடன், அது அரச கணக்காய்வாளர் நாயகத்தின் முழுமையான கணக்காய்வுக்கு உட்பட்டதாகும்.