ஊடகவியலாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியும்: நாமல்

ஊடகவியலாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியும்: நாமல்

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்துக்கு அமைய ஊடகவியலாளர்களுக்கு எதிராகநீதிமன்றத்துக்கு செல்ல முடியும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்தால் ஊடகவியலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படாதென தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தாம் எழுதும் விடயங்களுக்குப் பொறுப்புக்கு கூறுவதற்கு ஊடவியலாளர்கள் தயாராக இருந்தால், எந்த சட்டம் வந்தாலும் ஊடகவியலாளர்கள் அதற்கு அஞ்சத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்தின் இரண்டாம்வாசிப்பு மீதான விவாதத்தை நேற்று (09) ஆரம்பித்து வைத்து தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்துக்கு எதிராக இருவரே உயர் நீதிமன்றம் சென்றிருந்தனர். இச்சட்டமூலம் பாராளுமன்றத்தின் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கான 14 நாட்களுக்குப் பின்னரே இந்த இரு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதனூடாக இச்சட்டமூலம் மீது எவருக்கும் அதிகளவில் ஈடுபாடில்லை என்பதே தெளிவாகிறது என்றார். தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்தின் ஊடாக நாட்டிலுள்ள அரச இயந்திரம், மக்களுக்கான சேவைகளை டிஜிட்டல் மயமாக்கவே எதிர்பார்க்கிறோம்.

கடந்தக் காலங்களில் சில நிறுவனங்களின் தரவுகள் காணாமல் போயுள்ளன. எனவே, தரவுகளைப் பாதுகாக்காது டிஜிட்டல் மயமாக்குவதில் எந்தவிதமானப் பிரயோசனங்களும் இல்லை என்றார்.

வங்கிகள், அரச நிறுவனங்களுக்கு மக்கள் வழங்கும் தரவுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.