சிரேஷ்ட பிரஜைகளின் வைப்புகளில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை
சிரேஷ்ட பிரஜைகளின் வைப்புக்களுக்கு விசேட வட்டி வீத மாற்றமொன்றை கொண்டு வருவதற்கான எவ்வித தீர்மானமும் இல்லை என நிதி மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்தது.
சிரேஷ்ட பிரஜைகளின் வைப்புக்காக வழங்கப்பட்ட விசேட வட்டியினை குறைக்க போவதாகவும் வட்டி வருமானத்தின் ஊடாக வழங்கப்பட்ட வருமான வரி நிவாரணத்தை அகற்ற போவதாகவும் சில ஊடகங்கள் அடிப்படையற்ற செய்திகளை வெளியிட்டிருந்தன.
கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் வங்கி வட்டியின் ஊடாக அறவிடப்பட்ட வரியினை ரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதேபோல் மாதாந்தம் வட்டியின் ஊடாக 2 இலட்சத்து 50 ஆயிரம் வரை பெறும் நபர்களுக்கும் வரி விலக்கீடு அளிக்கப்பட்டது.
அதற்கமைய, தற்போதைய முடிவுகளில் எவ்வித மாற்றங்களும் இல்லையென நிதி அமைச்சு சிரேஷ்ட பிரஜைகளுக்கு தெளிவுப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)