கல்முனையில் கொவிட் 19 நோய் எதிர்ப்பு பானம் பகிர்ந்தளிப்பு
கொவிட் 19 தொற்றுக்கு எதிராக கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நோய் எதிர்ப்பு பானம் கல்முனை பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை பகிர்ந்தளிக்கப்பட்டது.
கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.வை. இஷாகின் ஏற்பாட்டிலான இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரான வைத்தியர் நபீல் அலியார் மற்றும் அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.பி.எம்.றஜீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கல்முனை பிரதேசத்தில் கொரோனா பரவல் வீரியம் என பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் பிரகடணப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள மக்களுக்கே இந்த நோய் எதிர்ப்பு பானம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)