தேசிய காங்கிரஸின் வேட்புமனு நிராகரிப்பு
முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸினால் பாராளுமன்ற தேர்தலுக்காக திருகோணமலை மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தலைமயில் தேசிய காங்கிரஸின் குதிரை சின்னத்தில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும் குறித்த வேட்புமனுவில் சமதான நீதவானின் கையெழுத்தில்லை என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments (0)
Facebook Comments (0)