பொது தேர்தலில் முஸ்லிம் சமூகம் இன ரீதியான கட்சிகளை தவிர்க்க வேண்டும்: லாபீர் ஹாஜியார்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம்கள் இன ரீதியிலான கட்சிகளைத் தவிர்த்து முஸ்லிம்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் எப்போதும் உத்தரவாதமளிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியையே ஆதரிக்க வேண்டும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினரான லாபீர் ஹாஜியார் தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"இன்றைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் – தமிழ் அரசியல் கட்சிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன. அக்கட்சிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சிகளையும், தமிழர்கள் தமிழ்க் கட்சிகளையும் ஆதரிப்பதால் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக்கொள்ள முடியாது.
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தமட்டில் மாற்றுவழி ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்து தமது வாக்குகளை வழங்குவதாகும். பெரும்பான்மைக் கட்சிகள் சிறுபான்மைக் கட்சிகளை இணைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடுவதும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
இவ்வாறான நிலைக்கு அரசியல் களநிலைமை மாற்றமடைந்துள்ளது. எனவே சிறுபான்மை மக்கள் தங்கள் நலன்பேணும் பெரும்பான்மைக் கட்சிகளையே ஆதரிக்கவேண்டும். பெரும்பான்மைக் கட்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சியே தங்களுக்குப் பாதுகாப்பான கட்சி என்பதனையும் நினைவில் கொள்ளவேண்டும்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)