எழுத்தாளர் லுக்மான் ஹரீஸ் விருது வழங்கி கௌரவிப்பு
இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர் லுக்மான் ஹரீஸ், இலக்கியத் துறைக்கு தொடர்;ச்சியாக மேற்கொண்டு வரும் சேவைகளுக்காக அண்மையில் லண்டன் நகரில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவிலுள்ள முன்னணி புத்திஜீவிகள் மற்றும் கல்வியியலாளர்களை உள்ளடக்கிய பிரித்தானிய இலங்கையர் அமைப்பினாலேயே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் பொருளாதார, கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவினை கட்டியொழுப்புவதற்காக இந்த அமைப்பு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்த விருது வழங்கல் நிகழ்வில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள், சீலவிமல தேரர், பிரித்தானியாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிர்ஜ் தேவ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
லுக்மான் ஹரீஸ், பிரித்தானியாவினை தளமாகக் கொண்டு செயற்படும் எழுத்தாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், அரசியல் விமர்சகருமாவார்.
சமூகவியல் தொனிப்பொருளில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவர் ஏழு நூல்களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் சமூக நல்லிணகத்தினை ஏற்படுத்துவத்தற்காக பல புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து இவர் செயற்பட்டு வருகின்றார்.
ஊடகம் மற்றும் சமூக சேவைகள் ஆகிய துறைகளில் இலங்கை சமூகத்திற்கு ஆற்றி வருகின்ற சேவைகளுக்காக இதற்கு முன்னரும் இவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)