கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் உள்நாட்டு முயற்சிகளுக்கான கனேடிய நிதி பெறும் நிறுவனங்களின் விபரம்
இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான கனேடிய உயர் ஸ்தானிகராலயம் இந்த ஆண்டின் உள்நாட்டு முயற்சிகளுக்கான கனேடிய நிதியைப் (Canada Fund for Local Initiatives - CFLI) பெறுபவர்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
பின்வரும் பெறுநர்களுக்கு நல்வாழ்த்துக்கள்:
1. மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையம் (Centre for Human Rights and Development)
2. கொழும்பு ஃப்ரெண்ட்ஸ் இன் நீட் சொஸைட்டி (Colombo Friends in Need Society)
3. கொம்டு.இட் (Comdu.it)
4, கிரிஸாலிஸ் கெடலிஸ் (Chrysalis Catalyz)
5. ஊடக சட்டப் பேரவை (Media Law Forum)
6. மாலைதீவுகளின் கடற்கரைகளைப் பாதுகாக்கும் அமைப்பு (Save the Beach Maldives)
7. டிரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் சிறீலங்கா (Transparency International Sri Lanka)
8. வெரிட்டே ஆய்வு நிறுவனம் (Verité Research)
9. விமென் என்ட் டெமோக்ரஸி (Women & Democracy)
சிவில் சமூகம் மற்றும் உள்நாட்டு சமூகங்களுடனான உறவை வலுப்படுத்தும் அதேவேளையில் உள்நாட்டுப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் அமைப்புகளை ஆதரிப்பதுடன், அவற்றிற்கு CFLI வலுவூட்டுகின்றது.
இவ்வருடம், இலங்கை மற்றும் மாலைத்தீவுகளில் உள்ள அனைவருக்காகவும் பணியாற்றும் உள்ளடக்கமான ஆளுகை, பெண்களின் அதிகாரம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை செயற்பாடு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதில் CFLI பங்களிப்புச் செய்யவுள்ளது.
சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாத்தல், ஊழலை எதிர்த்துப் போராடுதல், அவயவங்களை இழந்தோரின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குத் தேவையான உபகரணங்களை வழங்குதல் அல்லது பெண் தொழில்முனைவோரின் சந்தைகளுக்கான அணுகலை விரிவாக்குதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் உள்நாட்டு அமைப்புகளுக்கு உதவுவதன் மூலம் – இலங்கை மற்றும் மாலைதீவுகளில் அதிக உள்ளடக்கம் மற்றும் செழிப்புக்கு பங்களிப்பு செய்கின்றமைக்காக கனடா மகிழ்ச்சியடைகின்றது.
CFLI என்பது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் அதிக கோரல் உள்ள நிதியுதவி திட்டமாகும், இது சிறிய அளவிலான, உயர்-தாக்கமுள்ள திட்டங்களை ஆதரிப்பதுடன் முக்கியமாக உள்நாட்டுப் பங்காளர்களால் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
இந்த வருடம் எங்களுக்கு கிடைத்த மற்றும் நிதியளிக்க முடியாத சிறந்த திட்டங்கள் அனைத்தையும் முயற்சிகளையும் அங்கீகரிக்க இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்திக்கொள்கிறோம்.
CFLI திட்டங்களுக்கான அடுத்த விண்ணப்பம் கோரல் 2022 மார்ச் - ஏப்ரலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)