பலஸ்தீனுக்கான இலங்கை தூதுவராக பெனெட் குரே நியமனம்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பெனெட் குரே, பலஸ்தீனுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது உத்தியோகபூர்வ நியமனச் சான்றிதழ் கடிதத்தினை பலஸ்தீன் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ரியாத் அல் மலிகி நேற்று (03) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
பலஸ்தீனின் ரமல்லா நகரிலுள்ள பலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
பலஸ்தீன் அரசாங்கம் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டுத் துறையில் இணைந்து செயலாற்ற அதிக ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது என்றும், குறிப்பாக பலஸ்தீன சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் செயற்படுத்திவரும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரிவாக்கம் செய்வதன் மூலம் தாம் இதனைச் செயற்படுத்த என்ணியுள்ளதாக பலஸ்தீன் வெளிவிவகார தெரிவித்தார்.
பலஸ்தீனிய நப்லுஸ் நகரில் 2014 இல் ஆரம்பிக்கப்பட்ட 'மஹிந்த ராஜபக்ஷ தொழிற்பயிற்சி மையத்தினை' மீண்டும் செயல்படுத்துவதன் அவசியம் குறித்தும் அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.
பலஸ்தீனுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பெனெட் குரே, இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவராகவும் முன்னர் பணியாற்றியுள்ளார். அத்துடன் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சராக 1999ஆம் ஆண்டு காலப் பகுதியில் இவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)