Serendib Flour Mills இனது முதியோருக்கான 'உத்தம தலதா' செயற்திட்டம்
"தேசத்தை வளப்படுத்துவோம்" என்பதற்கு அமைவாக செயற்படும் Serendib Flour Mills முதியோருக்கு மகிழ்ச்சியை அளிக்கும் 'உத்தம தலதா' செயற்திட்டத்தை இரண்டாவது வருடமாகவும் முன்னெடுத்தது.
Serendib Flour Mills ஆனது மாவனெல்லை, குருணாகல் மற்றும் கம்பளையைச் சேர்ந்த முதியோர் இல்லங்களில் இருந்து 100க்கு மேற்பட்ட முதியோர்களுக்கு தலதா மாளிகைக்கு விஜயம் செய்து பிரார்த்தனையை மேற்கொண்டு ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும் மறக்க முடியாத பயணம் ஒன்றை ஒழுங்கமைத்திருந்தது.
அத்தோடு இந்த சிறப்பு அதிதிகள் எசல பெரஹராவின் அழகினை விசேடமாக வடிவமைக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்து பார்வையிட முடிந்ததோடு, அங்கு அவர்களுக்கு விசேட சௌகரியமான முன்வரிசை இருக்கை ஒழுங்கமைப்புகள், அத்துடன் உணவு மற்றும் சிற்றுண்டிகள் என்பனவும் வழங்கப்பட்டு அத்தருணத்தை மேலும் மகிழ்ச்சியாக்குவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.
உத்தம தலதா செயற்திட்டத்தின் ஊடாக Serendib Flour Mills, சமூகத்திற்கு, விசேடமாக வயது முதிர்ந்த மற்றும் ஆதரவற்றோருக்கு மரபினைத் தொடர்வதற்கும், அன்பை வெளிப்படுத்துவதற்கும், அடுத்த தலைமுறையுடன் ஒன்றிணைப்பதற்கும் உதவுகிறது.
மேலும், உலக முதியோர் தினத்தை தேசம் கொண்டாடும் வேளையில், வளப்படுத்துதல் என்பது வெறுமனே உணவுடன் மாத்திரம் முடிவுறாமல், மாறாக நல்ல எண்ணங்கள் மற்றும் செயல்களைக் கொண்டாடுதல் என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தனது நோக்கமான 'தேசத்தை வளப்படுத்துவோம்' என்பதற்கு இணக்கமாக நடந்துகொண்டது.
Comments (0)
Facebook Comments (0)