பாதிக்கப்பட்ட தொழில்முயற்சிகளுக்கு உதவுவதற்கான நிவாரண வழிமுறைகள்
வரையறுக்கப்பட்ட இலங்கை வங்கிகள் சங்கம் (உத்தரவாதம்) உடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களுக்கமைய, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கான நிவாரணங்களை வழங்குவதற்க நடவடிக்கை எடுத்துள்ளன.
2024.12.19ஆம் திகதியிடப்பட்ட 2024ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க சுற்றறிக்கை மற்றும் அதன் பிற்சேர்க்கையான 2025.01.01ஆம் திகதியிடப்பட்ட 2025ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க சுற்றறிக்கை ஆகியவற்றில் குறித்துரைக்கப்பட்டுள்தைப் போன்று திறன்மிக்க நிவாரண வழிமுறைகளை எல்லா உரிமம்பெற்ற வங்கிகளும் ஓர்சீர்முறையில் நடைமுறைப்படுத்துவதனை உறுதிப்படுத்தும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிவாரண வழிமுறைகளைப் பெற்றுக்கொள்வதற்கு கிடைக்கப்பெறும் மட்டுப்படுத்தப்பட்ட நேரத்தைக் கருத்தில் கொண்டு, கடன்பெறுநர்கள் 2025.03.31ஆம் திகதிக்கு முன்னர் தமது வங்கிகளைத் தொடர்புகொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகிறனர்.
ஏதேனும் நிராகரிப்புகள் மற்றும் பிணக்குகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில், தாமதிக்காது பின்வரும் வழிகள் ஊடாக இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களப் பணிப்பாளரைத் தொடர்பு கொள்ளுமாறு கடன்பெறுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
மீள்செலுத்தும் இயலளவு மற்றும் கடன்பெறுநர் மூலம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வியாபார புத்துயிரளித்தல் திட்டத்தை சமர்ப்பித்தல் என்பவற்றின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கான நிவாரண வழிமுறைகளானவை கடன் வசதிகளை 10 ஆண்டுகளைக் கொண்ட காலப்பகுதி வரை மீள அட்டவணைப்படுத்தல், செலுத்தவேண்டிய மூலதனத்தின் அடிப்படையில் மீள்கொடுப்பனவுகளை தொடங்கும் காலத்தை நீடித்தல், நிபந்தனைகளுக்கு உட்பட்டு செலுத்தப்படாத வட்டியை தள்ளுபடி செய்தல் மற்றும் புதிய தொழிற்படு மூலதனக் கடன்களை வழங்குதல் என்பவற்றை உள்ளடக்கும்.
மேற்கூறிய நிவாரண வழிமுறைகள் கிடைக்கப்பெற்றிருப்பினும் இற்றைவரை இந்நன்மைகளை பயன்படுத்திக் கொள்வதற்கு குறைந்தளவிலான கடன்பெறுநர்கள் மாத்திரம் தாமாக உரிமம்பெற்ற வங்கிகளை அணுகியிருந்தனர்.
மேற்குறித்த வழிமுறைகளுக்கு மேலதிகமாக, பொருளாதாரத்தின் படிப்படியான மீட்சியுடன், கடந்த அண்மைக் காலங்களில் மோசமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்களின் நிலைபேறான புத்துயிரளித்தலை வசதிப்படுத்தும் பொருட்டு வங்கித்தொழில் துறையுடன் ஒன்றாக இணைந்து இலங்கை மத்திய வங்கியினால் பல ஏனைய வழிமுறைகளும் எடுக்கப்பட்டன.
அதற்கமைய, ஏனையவற்றிற்கு மத்தியில், உரிமம்பெற்ற வங்கிகளின் கொவிட்-19க்குப் பிந்திய புத்துயிரளித்தல் பிரிவுகளை வலுப்படுத்தல், "உரிமம் பெற்ற வங்கிகளின் வியாபார புத்துயிரளித்தல் பிரிவுகளைத் தாபித்தல் வழிகாட்டல்" மீது 2024.03.28 ஆம் திகதியிடப்பட்ட 2024ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க சுற்றறிக்கையினை இலங்கை மத்திய வங்கி வழங்கியமை நிதியியல் மற்றும் தொழிற்பாட்டு இடர்பாடுகளை எதிர்கொள்கின்ற வளம்பெறத்தக்க வியாபாரங்களுக்கு உதவுவதற்காக வியாபார புத்துயிரளித்தல் பிரிவுகளை தாபிப்பதற்கு வங்கிகளை கட்டாயப்படுத்துதல் என்பன அவையாகும்.
வியாபார புத்துயிரளித்தல் பிரிவுகளின் கீழ், அத்தகைய கடன்பெறுநர்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க வியாபாரத் திட்டங்களையும் சாத்தியமான மீள்கொடுப்பனவுத் திட்டங்களையும் சமர்ப்பிப்பதற்கு வேண்டப்பட்டுள்ளனர் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு வங்கிகள் வட்டி வீதங்களில் சீராக்கம், முதிர்ச்சி நீடிப்புக்கள், இடைக்கால நிதி வழங்குதல், ஆலோசனை சேவைகள் வழங்குதல் போன்றன உள்ளடங்கலாக கடன் வசதிகளை மறுசீரமைத்தல் மற்றும் மீள் அட்டவணைப்படுத்தல் போன்ற பல ஆதரவுகளை வளம்பெறத்தக்க வியாபாரங்களுக்கு வழங்கலாம்.
வங்கிகளால் அறிக்கையிடப்பட்டுள்ளதன் பிரகாரம் 2024இன் இறுதியளவில் ஏறத்தாழ 6,000 கடன் வசதிகள் இவ்வியாபார புத்துயிரளித்தல் பிரிவுகள் ஊடாக வசதிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்களை www.cbsl.gov.lk இணையத்தளத்தின் மூலம் அணுகமுடியும்.
Comments (0)
Facebook Comments (0)