பெஸ்ட் புட் மார்கடிங் நிறுவனத்தினால் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

பெஸ்ட் புட் மார்கடிங் நிறுவனத்தினால் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

எம்.என்.எம்.அப்ராஸ்

கொவிட் - 19 நோயினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார நிலையில் அம்பாறை மாவட்டத்தில் வாழ்வாதர ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு புனித ரமழான் மாத்தினையொட்டி பெஸ்ட் புட் மார்கடிங் நிறுவனத்தினால் ஆறு மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இந்த பேரீச்சம் பழங்கள் கல்முனையன்ஸ் போரத்தின் ஊடாக அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் கிராமங்களிலும் உள்ள இனங்காணப்பட்ட பயனாளிக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

கல்முனையன்ஸ் போரம் விடுத்த வேண்டுகோளுக்கமைய பெஸ்ட் புட் மார்கடிங் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் முஹம்மத் அமீர் இந்த பேரீத்தம் பழங்களை அன்பளிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பேரீச்சம் பழங்களை விநியோகம் செய்யும் செயற்றிட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று (06) புதன்கிழமை கல்முனை இக்பால் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.

கல்முனையன்ஸ் போரத்தின் செயற்பாட்டாளர் பீ. எம் சன்ஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.