கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜே.ஜே பவுண்டேசனினால் நிவாரண உதவி

கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜே.ஜே பவுண்டேசனினால் நிவாரண உதவி

கொவிட் - 19 இன் காரணமாக முடக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஜே.ஜே பவுண்டேசனினால் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கொலன்னவை பிரதேசத்தினை தளமாகக் கொண்டு செயற்படும் இந்த பவுண்டேசனின் நிவாரண உதவிகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கயை முடக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு 2,500 ரூபா பெறுமதியான  2,500 உலருணவுப் பொதிகள் இதுவரை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பவுண்டேசனின் தலைவரான ஐ.வை.எம். அனீப் தெரிவித்தார்.

இன, மத வேறுபாடின்றி தேவையான அனைத்து மக்களுக்கும் எமது பவுண்டேசனின் உதவிகள் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வெல்லம்பிட்டி தர்மேதய விகாராதிபதி கவிதஜ தேரரின் வேண்டுகோளுக்கமைய குறித்த பகுதியில் வாழும் மக்களுக்கு கடந்த புதன்கிழமை (18) உலருணவுப் பொருட்கள் ஜே.ஜே பவுண்டேசனினால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக கொலன்னாவ பிரதேச செயலகம், மருதானை விஜயபா ரெஜிமன், வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையம், சிலாபத்துறை வைத்தியசாலை போன்றவற்றிற்கு  தலா 500 மார்ஸ்க்கள் வீதம் ஜே.ஜே பவுண்டேசனினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.