இந்திய அரசின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட சத்திர சிகிச்சைப் பிரிவு திறப்பு

இந்திய அரசின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட சத்திர சிகிச்சைப் பிரிவு திறப்பு

பழுலுல்லாஹ் பர்ஹான்

இந்திய - இலங்கை நட்புறவு திட்டத்தின் ஊடாக இந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுமார் 279 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி புதிய சத்திரசிகிச்சை பிரிவுக்கான கட்டிடத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று 04ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றது.

வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சனி கணேசலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உட்பட சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் பாலித மஹிபால ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

திறந்துவைக்கப்பட்ட சத்திர சிகிச்சைப் பிரிவில் நான்கு  சத்திர சிகிச்சை அறைகளும் தீவிர சிகிச்சை பிரிவில் பத்து  தீவிர சிகிச்சைக்கான கட்டில்களும் ஏனைய அதற்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதுடன் இதனால் கிழக்கு மாகாண மக்கள் பெரிதும் நன்மையடயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.