ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய அல்குர்ஆனுக்கு மும்மொழிகளிலும் ஒரே தர்ஜுமா

ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய  அல்குர்ஆனுக்கு மும்மொழிகளிலும் ஒரே தர்ஜுமா

சிங்­களம், ஆங்­கிலம், தமிழ் ஆகிய மொழி­களில் பல்­வேறு அல் குர்ஆன் மொழி­யெர்ப்­புக்கள் காணப்­ப­டு­வதால் குர்ஆன் சொல்ல வரு­கின்ற கருத்­துக்­களை பிழை­யாக விளங்­கவும் விளக்­கவும் வழி­வ­குக்­கி­றது.

அந்த வகையில் ஒரு மத்­திய குழுவின் கண்­கா­ணிப்பில் ஒரு மொழி­பெ­யர்ப்பு பொது­மக்கள் பாவ­னைக்­காக பதிக்­கப்­படல் வேண்டும் என்ற பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் பற்றி விசா­ரணை செய்து அறிக்கை சமர்ப்­பித்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் முன்­வைக்­கப்­பட்ட பரிந்­து­ரை­களில் முக்­கி­ய­மா­னது ஒரு குர்ஆன் மொழி­பெ­யர்ப்பு என்­ப­தாகும்.

மூன்று மொழி­க­ளிலும் இலங்­கையில் ஒரு மொழி­பெ­யர்ப்பு வெளி­யி­டப்­படும் வரையில் எந்த தர்­ஜுமா பாவிக்­கப்­பட வேண்டும் என்ற பரிந்­து­ரை­யையும், இலங்­கையில் வெளி­யி­டப்­படும் தர்­ஜு­மா­வுக்­கான ஏற்­பா­டுகள் எப்­படி அமை­ய­வேண்டும் என்­பது தொடர்­பா­கவும் உல­மாக்­க­ளதும் அமைப்­பு­க­ளதும் கருத்­துக்கள் வர­வேற்­கப்­ப­டு­கின்­றன.

இது குறித்து அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, ஷரிஆ கவுன்சில், தேசிய ஷூரா கவுன்சில், SCOT ஆகிய அமைப்­பு­களின் அபிப்­பி­ரா­யங்­களும் கேட்­கப்­பட்­டுள்­ளன. இது பற்­றிய அப்­பி­ரா­யங்­களை நேர­டி­யாக director@muslimaffairs.gov.lk என்ற ஈமெய்லுக்கு அனுப்பி வைக்கலாம் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Vidivelli