BCAS உயர் கல்வி நிறுவனத்தின் மாபெரும் இலவச கண்காட்சி
BCAS என்று அழைக்கப்படும் பிரிட்டிஸ் கோலிஜ் ஒப் அப்லைட் ஸ்டடிஸ் உயர் கல்வி நிறுவனத்தின் 20 வருட பூர்த்தியினை முன்னிட்டும் கல்முனை வளாகத்தின் ஐந்து வருட நிறைவாயோட்டியும் 2019ஆம் ஆண்டிற்கான மாபெரும் இலவச உயர்கல்வி கண்காட்சி ஒன்றை எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக தெளிவுட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு நிறுவனத்தின் கல்முனை கிளையில் நேற்று (10) செவ்வாய்;க்கிழமை இடம்பெற்றது. இச்சந்திப்பில் கல்முனை கிளையின் முகாமையாளர் என்.டி .ஹமீட் அலி கருத்து தெரிவிக்கையில்,
உயர் கல்வித் துறையில் சுமார் 20 வருட கால நிபுணத்துவம் மற்றும் அனுபவம் வாய்ந்த BCAS உயர்கல்வி வளாகத்தின் பூர்த்தி மற்றும் கல்முனை வளாகத்தின் 5 வருட நிறைவாயோட்டி மிகப் பிரமாண்டமான கண் காட்சியை இரு நாட்கள் ஏற்ப்பாடு செய்துள்ளோம்.
இந்நிகழ்வின் போது கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து இரத்ததான முகாம் ஒன்றினை 13ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ளோம்.
இக்கண்காட்சியானது உயர் கல்வி வளாகத்தில் உள்ள சுமார் பத்து கற்கை நெறி துறைகள் உள்ளடங்கலாக சுமார் 35 வகையான கூடங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது .
இக்கண்காட்சிகள தலைநகரிலே இடம்பெற்று வரும் ஆனால் எமது பிராந்தியத்தில் எமது நிறுவனமானது முதலாவதாக நாடாத்துகிறது. கிழக்கிலங்கை மாணவர்களுக்கு மிகவும் வரப்பிரசாதமாக அமையவிருக்கும் இக்கண்காட்சியில் மாணவர்கள் பெற்றோர்கள், கல்விமான்கள், வர்த்தகர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
மேலும் வெளிநாடுகளில் உயர்கல்வியை தொடர விரும்பும் மாணவர்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்வொன்றும் நடாத்த ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டு பல்கலைக்கழக பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். அதுமட்டுமன்றி விளையாட்டு வலயம் மற்றும் உயர்கல்வி ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.
கண்காட்சிக்கு வருகை தருபவர்களுக்கான இலவச மருத்துவமுகாமொன்றை ஏற்ப்பாடு செய்துள்ளோம். இம்முகாமில் இரத்த அழுத்தம்,இரத்த வகை, உடத்திணிவுச் சுட்டி மற்றும் இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு என்பனவற்றை பரிசோதிக்க கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
மேலும் பார்வையாளர்கள் தங்களிற்கு தேவையான சட்ட ஆலோசனைகளை பெறக்கூடிய வகையில் சிரேஷ்ட மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த சட்ட வல்லுநர்களை மற்றும் விரிவுரையாளராக்களினால் இலவச சட்ட முகாமொன்றும் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் துறைசார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த விரிவுரையாளர்களிடம் மாணவர்களும் பெற்றோரும் உயர் கல்வி சம்மந்தமான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் இக்கண்காட்சி பல பிரிவுகளை உள்ளடக்கியது.
இது தொடர்பாக அதற்கு பொறுப்பான விரிவுரையாளர்களால் விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பாக பொறியியல் பீடமானது பல நவீன கட்டிட அமைப்புக்களின் மாதிரிகளை உருவாக்கி வருகின்றது. குறிப்பாக அதி நவீன வாகன தரிப்பிடத்திற்கான முன்மொழிவினையும் நிலநடுக்கத்தை எதிர்த்து தாங்க கூடிய அடித்தள மற்றும் மாதிரி மற்றும் பொறியல் துறைக்கே உரிய உபகரணங்களின் தொழிற்ப்பாடுகளை விபரித்தல் போன்றவைகளாகும்.
மேலும் முகாமைத்துவ பீடமானது தற்காலத்தில் மனிதர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தங்களை எவ்வாறு முகாமைத்துவம் செய்தல் மற்றும் ஒரு சிறந்த தலைவர் உருவாவதற்கு அடிப்படையாக காணப்படக்கூடிய அம்சங்கள் போன்றவற்றை உள்ளடக்கி இருக்கின்றது.
மேலும் கணனி பீடமானது குறிப்பாக தனது மாணவர்களின் முயற்சியில் இயந்திர மனிதனின் முப்பரிமாண வடிவம் மற்றும் பல மென்பொருட்களையும் ஆர்டினோ செயற்திட்டங்களையும் உருவாக்கியுள்ளது.
இன்னும் கட்டிட கற்கை பீடமானது அதி நவீன தொழிநுட்பத்துடன் கூடிய முன்மாதிரி கட்டிட மாதிரிகளை உருவாக்கி உள்ளது. மாணவர்களின் தொழிற் திறனை விருத்தி செய்யக்கூடிய வகையில் மொழிசார் விளையாட்டுக்கள் மற்றும் பயிற்சிகள் பலவற்றையும் ஆங்கில மொழித்துறை பீடமானது ஏற்பாடு செய்துள்ளது.
இவ்வாறு மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி உயர்கல்விக் கண்காட்சிக்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. ஐ. ஜி.கே முத்துபண்டார். அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.
கௌரவ அதிதியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் முன்னாள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் தற்போதைய பிகாஸ் உயர் கல்வி வளாகத்தின் கற்கை நெறிகளுக்கு பொறுப்பான பீடாதிபதியுமான பேராசிரியர் சானிகாஹிம்புருகம அவர்களும் விசேட அதிதியாக நிறுவனத்தின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துல் ரஹ்மான் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
-எம்.என்.எம்.அப்ராஸ்-
Comments (0)
Facebook Comments (0)