ஜப்பான் மற்றும் ஐ.நா. பெண்கள் அமைப்பு ஆகியன மன்னாரில் பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவு
பெண்களின் பொருளாதார வலுவூட்டலை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சியில், கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகத்தின் அமைச்சர்/துணைத் தலைவரான காமோஷிடா நவோகி, 'சமாதானத்திற்கான பாதைகள்: இலங்கையில் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு குறித்த தேசிய செயற்திட்டத்தை நனவாக்குதல்' செயற்திட்டத்தின் மூலம் ஆதரவளிக்கப்பட்ட மன்னார் மாவட்ட பெண் தொழில்முனைவோர்களை பார்வையிட்டார்.
கிறிசாலிஸ் நிறுவனத்துடன் பங்குதாரராக இணைந்து ஐ.நா. பெண்கள் அமைப்பினால் அமுல்படுத்தப்படும், ஜப்பான் அரசாங்கத்தின் தாராளமான ஆதரவுடனான இந்த செயற்திட்டம், அனுராதபுரம், மட்டக்களப்பு, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெண்கள் தலைமையிலான வணிகங்களை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது.
ஜப்பான் அரசாங்கத்தின் 1.7 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியுடன், சுமார் 500 பெண் தொழில்முனைவோர் வணிகத் திட்டமிடல், நிதியியல் அறிவு மற்றும் உற்பத்திப்பொருளின் புத்தாக்கம் ஆகியவற்றில் தொடர்ச்சியான பயிற்சிகள் மூலமாக தங்களது இயலளவை வெற்றிகரமாக மேம்படுத்தியுள்ளனர்.
இந்த இலக்கு பயிற்சிகள் அவர்களின் வணிக மாதிரிகளை மேம்படுத்த உதவுவதுடன், சந்தைகளுக்கான அணுகலை அதிகரிப்பதற்கான பயிற்சிகள் மற்றும் அவர்களின் செயற்பாடுகளில் நிலைபேண்தகு தன்மையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவற்றையும் வழங்கியிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர்/துணைத் தலைவரான காமோஷிடா நவோகி, "பெண்களுக்கு அவசியமான திறன்களை வழங்குவதன் மூலமும், அவர்களின் இயலளவுகளை வெளிப்படுத்தி, நாம் சமூகங்கள் முழுவதும் எதிரொலிக்கும் நேர்மறையான மாற்றங்களை தூண்டலாம் என்பதுடன் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய உந்து சக்தியை உருவாக்க முடியும். பெண்களின் வலுவூட்டலுக்கும், இந்த நாட்டின் நிலைபேண்தகு, உள்ளடங்கலான அபிவிருத்திக்கு ஜப்பான் தொடர்ந்து தனது அர்ப்பணிப்பை வழங்குகிறது" என்று கூறினார்.
இந்த ஒத்துழைப்பானது பால்நிலை சமத்துவம் மற்றும் உள்ளடங்கலான அபிவிருத்திக்கான ஜப்பானின் நீண்டகால அர்ப்பணிப்பை அடிப்படையாகக் கொண்டதுடன் நிலைபேண்தகு அபிவிருத்தி மற்றும் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலுக்கான 2030 நிகழ்ச்சி நிரலின் கீழ் பகிரப்பட்ட முன்னுரிமைகளை பிரதிபலிக்கின்றது.
பொருளாதார வலுவூட்டலுக்கான வழிவகைகளை உருவாக்குவதன் மூலம், இந்த முயற்சியானது இலங்கையில் நிலைபேண்தகு சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கு பங்களிக்கிறது.
Comments (0)
Facebook Comments ()