இந்தியன் வங்கிக்கும் அமானா தகாபுல் லைபிற்கும் FIUஇனால் தண்டப் பணம் விதிப்பு

இந்தியன் வங்கிக்கும் அமானா  தகாபுல் லைபிற்கும் FIUஇனால்  தண்டப் பணம் விதிப்பு

நிதியியல் உளவறிதல் பிரிவினால் 2024 நவம்பர் தொடக்கம் டிசம்பர் வரையான காலப் பகுதியில் இந்தியன் வங்கி மற்றும் அமானா தகாபுல் ஆகியவற்றின் மீது நிருவாக ரீதியான தண்டப்பணங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் பயனைக்கொண்டு, நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிறுவனங்களின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றை பரிசீலனையிற்கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம்.  

அதற்கமைய, பணம் தூயதாக்குதலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துனர் என்ற ரீதியில், நிதியியல் உளவறிதல் பிரிவு, நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு  2024 நவம்பர் தொடக்கம் டிசம்பர் வரையான காலப்பகுதியில் கீழே காட்டப்பட்டவாறு, மொத்தமாக 3 மில்லியன் ரூபாவினை கொண்ட தொகையினைத் தண்டப்பணமாக சேகரித்தது. தண்டப்பணங்களாக சேகரிக்கப்பட்ட தொகைத் திரட்டு நிதியத்திற்கு வரவுவைக்கப்பட்டன.

1. இந்தியன் வங்கி
விதிப்புத்திகதி: 2024 டிசம்பர் 18            
தொகை        : ரூ. 2,000,000.00 (ரூபாய் இரண்டு மில்லியன்)            
கொடுப்பனவுத் திகதி    : 2024 டிசம்பர் 31     
தண்டப்பணம் விதிக்கப்பட்டமைக்கான காரணம் :

நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டம் அத்துடன் அதன் கீழ் வழங்கப்பட்ட விதிகள், ஒழுங்குவிதிகள் மற்றும் பணிப்புரைகள் என்பவற்றை கடைப்பிடிப்பதற்கு வங்கி தவறியமைக்காக பின்வருமாறு நிருவாகரீதியாக தண்டப்பணம் விதிக்கப்பட்டது;

i. நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் 6(ஆ) ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம் வழங்கப்பட்ட 2008இன் 01ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் ஒழுங்குவிதிகள் மூலம் வேண்டப்பட்டவாறு, அத்தகைய பரிமாற்றல் ரூபா ஒரு மில்லியனை (ரூ.1,000,000.00) அல்லது ஏதேனும் வெளிநாட்டு நாணயத்தில் அதற்குச் சமனான தொகையை விஞ்சுகின்றவிடத்து, வர்த்தக நிதியுடன் தொடர்புடைய பல்வேறு இலத்திரனியல் நிதிப் பரிமாற்றல் கொடுக்கல்வாங்கல்களை நிதியியல் உளவறிதல் பிரிவுக்கு வங்கி அறிக்கையிடுவதற்கு தவறியிருந்தது.

ii. 2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் ஒழுங்குவிதிகள் (ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் 1373), 2012ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் ஒழுங்குவதிகள் (ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் 1267), மற்றும் 2017ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் ஒழுங்குவிதிகள் (கொரிய சனநாயக மக்கள் குடியரசு) என்பனவற்றின் கீழ் வழங்கப்பட்ட பெயர்குறிக்கப்பட்ட நபர்கள், குழுக்கள், மற்றும் நிறுவனங்களின் இற்றைப்படுத்தப்பட்ட பட்டியல்களைப் பேணுவதற்கும் அதனை வங்கியின் பணம்தூயதாக்கலுக்கெதிரான முறைமையினுள் ஒருங்கிணைப்பதற்கும் வங்கி தவறியிருந்தது.

iii. முறைமைகளிலும் நடைமுறைகளிலும் மேற்குறிப்பிடப்பட்ட குறைபாடுகள் அவதானிக்கப்பட்ட போதிலும், வங்கியின் மூலம் பேணப்படும் பெயர்குறிக்கப்பட்ட தனிப்பட்டவர்கள் அல்லது நிறுவனங்களுடனான வியாபார தொடர்புகளின் எடுத்துக்காட்டல்கள் தளத்திலான பரீட்சிப்பு காலப்பகுதியில் வெளிப்படுத்தப்படவில்லை.

2. அமானா தகாபுல் லைப் பிஎல்சி
விதிப்புத்திகதி : 2024 டிசம்பர் 18            
தொகை : ரூ.1,000,000.00 (ரூபாய் ஒரு மில்லியன்)            
கொடுப்பனவுத் திகதி    : 2024 டிசம்பர் 30     
தண்டப்பணம் விதிக்கப்பட்டமைக்கான காரணம் :

நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல்; சட்டம் அத்துடன் அதன் கீழ் வழங்கப்பட்ட விதிகள், ஒழுங்குவிதிகள் மற்றும் பணிப்புரைகள் என்பவற்றை கடைப்பிடிப்பதற்கு வங்கி தவறியமைக்காக பின்வருமாறு நிருவாகரீதியாக தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

i. 2024 யூன் 03 அன்று திகதியிடப்பட்ட 2387/02ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் மூலம் 2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் ஒழுங்குவிதிகளின் கீழ் (ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் 1373) வழங்கப்பட்ட பெயர்குறிக்கப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் இற்றைப்படுத்தப்பட்ட முழுமையான பட்டியலொன்றைப் பேணுவதற்கு கம்பனி தவறியிருந்தது.

ii. கீழே காணப்படும் இணங்காமைகளின் காரணமாக, இலக்கிடப்பட்ட நிதியியல் தடைகள் தொடர்பில் எந்தவொரு குறித்துரைக்கப்பட்ட பட்டியலுடன் தொடர்புடைய 1968ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் நியதிகளின் பிரகாரம் ஆக்கப்பட்ட ஏதேனும் ஒழுங்குவிதியின் கீழ் வழங்கப்பட்ட பெயர் குறிக்கப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனங்களின் ஏதேனும் பட்டியலில் ஏதேனும் வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களாக வரக்கூடியவர்கள் அல்லது நன்மைபெறுநர்கள் காணப்படுகின்றனரா என்பதை உறுதிப்படுத்துவதற்கு 2019ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க காப்புறுதியாளர்கள் (வாடிக்கையாளர் உரிய விழிப்புக்கவன) விதிகளின் 58ஆம் விதியுடன் இணங்குவதற்கு கம்பனி தவறியிருந்தது.

-  2012ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் ஒழுங்குவிதிகள் (ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் 1267) மற்றும் 2017ஆம் ஆண்டின் (ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் 1718) ஐக்கிய நாடுகள் ஒழுங்குவிதிகள் (கொரிய சனநாயக மக்கள் குடியரசுடன் தொடர்புடைய தடைகள்) என்பனவற்றின் கீழ் பெயர்குறிக்கப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களைப் பேணுவதற்கு கம்பனி தவறியிருந்தது.

- 2024 யூன் 03 அன்று திகதியிடப்பட்ட 2387ஃ02ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் மூலம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானத்தின் கீழ் வழங்கப்பட்ட இற்றைப்படுத்தப்பட்ட பெயர்குறிக்கப்பட்ட பட்டியலிற்கு எதிராக கம்பனி அதன் தற்போதுள்ள வாடிக்கையாளர் தரவுத்தளத்திற்கான உறுதிப்படுத்தலை மேற்கொண்டிருந்தது என்பதை காண்பிப்பதற்கான எந்தவொரு பதிவை அல்லது சான்றை வழங்குவதற்கும் பேணுவதற்கும் கம்பனி தவிறியிருந்தது.

iii. முறைமைகளிலும் நடைமுறைகளிலும் மேற்குறிப்பிடப்பட்ட குறைபாடுகள் அவதானிக்கப்பட்ட போதிலும், வங்கியின் மூலம் பேணப்படும் பெயர்குறிக்கப்பட்ட தனிப்பட்டவர்கள் அல்லது நிறுவனங்களுடனான வியாபார தொடர்புகளின் எடுத்துக்காட்டல்கள் தளத்திலான பரீட்சிப்பு காலப்பகுதியில் வெளிப்படுத்தப்படவில்லை.