சவூதிப் பெண்கள்: பெண் வலுவூட்டல் செயல்பாடுகளும், தேசத்தின் வளர்ச்சியில் அவர்களது பங்களிப்பும்
காலித் ஹமூத் அல்கஹ்தானி
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்
சவூதி அரேபியா ஸ்தாபகர் மன்னர் அப்துல்அசீஸ் பின் அப்துல் ரஹ்மான் ஆல் ஸுஊத் அவர்களின் காலத்திலிருந்து இரண்டு புனிதத் தளங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் ஆல் ஸுஊத் அவர்களின் காலம் வரையில், சவூதிப் பெண்கள் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் ஒரு தீவிர பங்காளியாக மாறும் அளவுக்கு பல்வேறு வகையில் வலுவூட்டப்பட்டனர்.
மேலும் அவர்கள் அறிவியல், பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகவியல் போன்ற பல்வேறு துறைகளில் மெச்சத்தக்க வெற்றிகளையும் அடைந்து வந்துள்ளனர்.
சவூதி அரேபியாவின் சட்டங்கள், இஸ்லாமிய ஷரீஆவிலிருந்து பெறப்பட்டவை. அச்சட்டங்கள் இருபாலாருக்குமிடையில் நீதியை நிலை நாட்டுவதை இலக்காகக் கொண்டு, இரு பாலினத்தின் பண்புகளையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கிடையிலான சமத்துவக் கொள்கையை ஏற்றுக்கொள்கின்றன.
சவூதி அரேபிய இராச்சியம், பாலினங்களுக்கிடையிலான உறவின் ஒருங்கிணைப்பு மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு சிறந்த வழியாகும் என்று நம்புகிறது. அவ்வாறே வேலை செய்யும் உரிமை, கல்வி, சுகாதாரம், பொருளாதார உரிமைகள் போன்ற மனித உரிமைகளின் பெரும்பாலான பகுதிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே முழுமையான சமத்துவத்தைப் பேணுவதற்கும் இது சிறந்த வழியாகும். சமத்துவக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலும் மற்றும் அதை வலியுறுத்தும் வகையிலும், சவூதி மனித உரிமைகள் ஆணையம், தேவைகளுக்கு ஏற்ப தகவல்களைச் வழங்கும் உரிமையை பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வழங்குகிறது.
பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்காக, இரு பாலினருக்கும் ஓய்வூதிய வயதை ஒருங்கிணைத்தல், ஊதியம், வகை மற்றும் பணித் துறை, மற்றும் வேலை நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் பாலின பாகுபாட்டைத் தடுப்பது, முன் அனுமதிகள் ஏதும் பெறாமல் பெண்கள் வணிகத்தில் ஈடுபட அனுமதித்தல் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை சவூதி அரேபிய இராச்சியம் ஏற்படுத்தியுள்ளது .
2001ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான ஐக்கிய நாடுகளின் சாசனத்தை சவூதி அரேபியாவின் இராச்சியம் அங்கீகரித்துக் கைச்சாத்திட்டது. அத்தோடு, தலைமை மற்றும் நிர்வாகப் பாத்திரங்கள் மூலம் திறம்பட பங்களிப்பதில் பெண்களின் முக்கிய வகிபாகம் காரணமாக தகுதிவாய்ந்த பெண்களை பல துறைகளில் உயர் பதவிகளில் அமர்த்துவதற்காக பல்வேறு சட்டங்களும் சீர்திருத்தங்களும் கடந்த ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஷூரா கவுன்சிலில் பெண்களுக்கு 20% ஆசனங்கள் ஒதுக்கி ஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு அரச ஆணை வெளியிடப்பட்டது. மேலும் நகராட்சிகளின் இயக்குநர்கள் குழுவிற்கு பெண்களைத் தேர்வு செய்தல் மற்றும் பெண்களை அரச மற்றும் தனியார் துறைகளில் உயர் பதவிகளுக்கு நியமித்தல் போன்றவையும் இவ் ஆணையில் உள்ளக்கடக்கப்பட்டுள்ளது.
அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு வலுவூட்டுவதை உறுதி செய்வதற்காக சவூதி அரேபியா மேற்கொண்ட மிக முக்கியமான நடவடிக்கைகளில் சில பின்வருமாறு:
• பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலானா பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவதற்க்காக சட்டக் கட்டமைப்பில் பல்வேறு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டது. குறிப்பாக பணி, பயண ஆவணங்கள், சிவில் சட்டம் , சமூக பாதுகாப்பு , போக்குவரத்து மற்றும் தனியார் சட்டம் போன்ற சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதைக் குறிப்பிடலாம். இவ்வாறு இவ் அனைத்துச் சட்டங்களும் பெண்களுக்கு வலுவூட்டுதாகவும் அவர்களின் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதை உத்தரவாதம் அளிப்பதாகவும் அமைந்தன.
• "சவூதிப் பெண்களுக்கு வலுவூட்டும் முன்முயற்சியை" அரேபியாவின் பொதுப் பாதீட்டுக்குள் கொண்டுவந்தமை.
• பல்வேறு நவீன துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள உதவும் வகையில், சவூதிப் பெண்களை வலுவூட்டுவதற்க்காக கல்வித் துறைகளை விருத்தி செய்தமை.
• பெண்களின் அந்தஸ்த்தை மேம்படுத்துவதையும் சமூக, பொருளாதார மற்றும் அறிவியல் ரீதியில் அவர்களை உயர்வடையச் செய்வதையும் நோக்கமாகக் கொண்ட கொள்கைகளை மறுபரிசீலனை செய்வதற்கும் கூட்டாண்மைகள், முன்முயற்சிகள் மற்றும் திட்டங்களை உருவாக்குவதற்கும் குடும்ப விவகார கவுன்சிலில் பெண்கள் குழுவை நிறுவியமை.
• மனித உரிமைகள் ஆணையம் அதன் குழுக்களில் பெண்களுக்கான ஒரு விஷேட குழுவை நியமித்துள்ளது, இது அனைத்துத் துறைகளிலும் சர்வதேச தரத்திற்கு ஏற்ப பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் அக்கறை கொண்டுள்ளது.
• பாலின சமநிலை மையம் நிறுவியமை .
பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட "சவூதி விஷன் 2030", சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெண்களுக்கு தேவையான முயற்சிகளுக்கும் அவர்களை அனைத்து மட்டங்களிலும் செல்வாக்கு மிக்க கூறுகளாக உயர்த்தி காட்டுவதற்கும் உயரிய இடத்தை வழங்குகிறது.
சவூதி அரேபிய இராச்சியம் கண்டு வரும் வளர்ச்சி இயக்கத்தின் ஒரு பகுதியாக பெண்களின் செயல்திறனை உயர்த்துவதற்கும் தொழிலாளர் சந்தையில் அவர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்குமாக இவ் விஷனில் ஒரு சுயாதீனமான மூலோபாய இலக்கு வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலைப்பாட்டில் இருந்து, சமூகத்தில் அவர்களின் அந்தஸ்த்தை மேம்படுத்தும் பல தீர்மானங்கள், சட்டம் மற்றும் ஒழுங்குகல் வெளியிடப்பட்டதன் மூலம் சவூதிப் பெண்களின் வலுவூட்டல் செயல்பாடு துரிதப்படுத்தப்பட்டுள்ளன. "விஷன் 2030" ஆனது தொழிலாளர் சந்தையில் சவூதிப் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. அவர்களின் பங்கேற்பு விகிதம் 36% ஐ எட்டியுள்ளது.
இது 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இந்த சதவீதம் இரண்டு மடங்கு அதிகமாகும். இராச்சியத்தில் பெண்களுக்கான தொழிலாளர் கணக்கெடுப்பின் முக்கிய குறிகாட்டிகளின்படி, வேலையின்மை விகிதம் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.
சவூதி புள்ளியியல் ஆணையம் 2023ஆம் ஆண்டு டிசம்பரில் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 945,691 சவூதி பெண்கள் மற்றும் 334,984 குடியிருப்பாளர்கள் உட்பட 1,280,675 பெண் பணியாளர்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் தனியார் துறையில் 44,769 குடிமக்கள் முதல் முறையாக பணியில் சேர்ந்துள்ளனர். இது தனியார் துறையில் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை 10,975,830 அதிகரிக்கச்செய்துள்ளதாக இவ் அறிக்கை மதிப்பாய்வு செய்துள்ளது.
சவூதி தொழில் சந்தை அறிக்கையின் படி, தனியார் துறையில் பணிபுரியும் மொத்த குடிமக்கள் தொகை 2.3 மில்லியன்கலாகும். இதில் ஆண்கள் 59.2% உம் பெண்கள் 40.8% ஆகும். தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்களிப்பு விகிதம் 2017 இல் 17% ஆக இருந்தது. அது 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 35.3% ஆக உயர்ந்து இரட்டிப்பாகியுள்ளது.
மேலும் பெண்கள் தலைமைப் பதவிகளிலும், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குத் துறை போன்ற பல புதிய துறைகளிலும் பணிக்கமர்த்தப்பட்டு வலுவூட்டப்படுகிறார்கள்.
புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையத்தால் வெளியிடப்பட்ட சவூதி பெண்கள் 2022ஆம் ஆண்டு அறிக்கை, மற்ற வயதினரை விட இளம் வயதுப் பெண்களே அதிக எண்ணிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் எனக் குறிப்பிடுகிறது. அதாவது (15 - 19) வயதுக்குட்பட்ட பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 916,439 ஐயும், (20 - 24) வயதுக்குட்பட்ட பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 850,780 ஐயும் எட்டியுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)