பெண் அரசியல் செயற்பாட்டாளர்களின் சமூக ஊடக் கல்வியறிவை மேம்படுத்த செயலமர்வு
ஏ.எச். ஹஸ்பர், ஜே.எப். காமிலா பேகம், எம்.என்.எம்.அப்ராஸ்
கிழக்கு மாகாணத்திலுள்ள பெண் அரசியல் செயற்பாட்டாளர்களின் சமூக ஊடக் கல்வியறிவை மேம்படுத்தும் வகையிலான செயலமர்வுகள் 'கபே' தேர்தல் கண்காணிப்பு அமைப்பினால் கடந்த வார இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற பெண்களின் சமூக ஊடக் கல்வியறிவினை மேம்படுத்தும் நோக்கில் நாட்டிலுள்ள 15 மாவட்டங்களின் 'ஜனனி' எனும் செயற்திட்டம் கபேயினால் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன் ஒரு அங்கமாக கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த செயலமர்வுகளில் வளவாளர்களாக விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலி மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடக செயலாளர் ஆர். யோகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன், திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் திரு.எஸ்.சுதாஹரன், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே. கருணாகரன் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சூபியான உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)