நீக்கப்பட்ட முஷாரப் எம்.பியின் 'தீர்வு' நிகழ்ச்சி மீண்டும் பேஸ்புக்கில் இணைப்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.முஷாரப் பங்கேற்றிருந்த 'தீர்வு' நிகழ்ச்சியின் நேரலைப் பதிவு, வசந்தம் தொலைக்காட்சியின் 'பேஸ்புக்' பக்கத்திலிருந்து அழுத்தம் காரணமாக நீக்கப்பட்ட விடயம் விடியல் இணையத்தளத்தினால் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், அது நேற்று செவ்வாய்க்கிழமை (12) இரவு மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றிருந்த 'தீர்வு' அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி, கடந்த 06ஆம் திகதி - வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
அதேவேளை வசந்தம் தொலைக்காட்சியின் 'பேஸ்புக்' பக்கத்திலும் அந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இந்த நிலையிலேயே அழுத்தம் காரணமாக வந்தம் தொலைக்காட்சியின் 'பேஸ்புக்' பக்கத்திலிருந்து அந்த நிகழ்ச்சிப் பதிவு நீக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் குறித்து, மேற்படி நிகழ்ச்சிப் பதிவின் கீழ், அதிகமானோர் மிக மோசமாக கருத்துக்கள் (comment) பதிவிட்டிருந்தனர். இதனால் குறித்த நேரலையினை நீக்குவதற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வசந்தம் தொலைக்காட்சியின் 'பேஸ்புக்' பக்கத்திலிருந்து மேற்படி பதிவு நீக்கப்பட்டமை தொடர்பில் 'விடியல்' இணையத்தளம் செய்தியொன்றை வெளியிட்டிருந்த நிலையில், அதனை 'புதிது' செய்தித்தளமும் பதிவு செய்தது
இவ்வாறான நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் கலந்து கொண்ட - 'தீர்வு' நிகழ்ச்சியின் பதிவு, வசந்தம் தொலைக்காட்சியின் 'பேஸ்புக்' பக்கத்தில் மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.
முஷாரப் எம்.பி பங்கேற்ற தீர்வு நிகழ்ச்சியின் பேஸ்புக் நேரலை நீக்கம்
Comments (0)
Facebook Comments (0)