ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளராக ஹமீட் அஷ்ரப் நியமனம்
இலங்கையின் முன்னணி வர்த்தகரான ஹமீட் அஷ்ரப், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் கடந்த 15ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார்.
Fantasia Elastics நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான இவர், தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் 35 வருட அனுபவத்தினைக் கொண்டுள்ளார். உலக நாடுகளில் இடம்பெற்ற பல வர்த்தக மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளில் இவர் பங்கேற்றுள்ளார்.
இதற்கு முன்னர் கைத்தொழில் தொழிநுட்ப நிறுவகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் ஹமீட் அஷ்ரப் கடமையாற்றியுள்ளார். இந்த நியமனம் அப்போதைய விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சரினால் வழங்கப்பட்டது.
இதேவேளை, இலங்கை வங்கியின் துணை நிறுவனமான இலங்கை வங்கி சொத்து அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ கம்பனியின் பணிப்பாளராகவும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையும் இவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)