பிரிடிஷ் கவுன்சிலில் சூரிய மின் உற்பத்தி

பிரிடிஷ் கவுன்சிலில் சூரிய மின் உற்பத்தி

கொழும்பிலுள்ள பிரிடிஷ் கவுன்சில் அலுவலகமானது, தனது ஆற்றல் தேவைகளில் 100 சதவீதத்தை சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யும் சூரிய சக்தி உற்பத்தி அமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், பிரிடிஷ் கவுன்சிலானது பசுமையாக மாறுவதற்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக 220kWp கொண்ட 353 சோலார் PV பேனல்களை நிறுவியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், கொழும்பு பிரிடிஷ் கவுன்சில் அலுவலகமானது அடுத்த 25 ஆண்டுகளுக்கு வருடம்தோறும்; 285.97 டன் CO2 ஐ சேமிக்கும்.

இந்த உத்தியோகபூர்வ நிகழ்வானது இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிகின் அனுசரணையின் கீழ், பிரதி உயர்ஸ்தானிகர் லிசா வான்ஸ்டால் மற்றும் பிரிடிஷ் கவுன்சில் இலங்கையின் பணிப்பாளர் ஒர்லாண்டோ எட்வர்ட்ஸ் ஆகியோரின் பங்குபற்றலுடன் இந்த சூரிய மின்சக்தி அமைப்பின் உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வானது சிறப்பாக நடைபெற்றதுடன் நிகழ்வில் ஏனைய பங்குதாரர்கள், கொழும்பு அலுவலக ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என்பனோரும் கலந்துகொண்டனர்.


இந்த முயற்சியானது நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி கொழும்பு பிரிடிஷ் கவுன்சிலின் மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளிற்கு ஒரு வலுவான எடுத்துக்காட்டாகும். கொழும்பு பிரிடிஷ் கவுன்சிலானது காலை 08.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை செயற்படுவதுடன் இந்நேரமானது இலங்கையில் மின்சாரம் பயன்படுத்துவதற்கான உகந்த நேரமாகும். எனவே, சூரிய சக்தியை உருவாக்கும் அமைப்பை ஏற்றுக்கொள்வது தேசிய ரீதியாக மின்சார சுமையைக் குறைக்க உதவும்.

"எங்கள் கொழும்பு அலுவலகம் சூரிய சக்தியை உருவாக்கும் அமைப்பை ஏற்றுக்கொள்வது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த செயற்றிட்டமானது அலுவலகத்தின் ஆற்றல் தேவைகளில் 100 சதவீதத்தையும் உருவாக்க அனுமதிக்கின்றதுடன் அடுத்த 25 ஆண்டுகளுக்கு நமது CO2 உமிழ்வை ஆண்டுதோறும் 285 டன்கள் குறைக்க உதவும்.

இந்த முயற்சியானது நிலைபேறான தன்மை, காலநிலை அவசரநிலையின் சவால்களை எதிர்கொள்வது மற்றும் நாங்கள் சேவை செய்யும் சமூகங்களுக்கு நேர்மறையான முறையில் பங்களிக்கும் எங்களது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது" என்று இந்த சூரிய மின்சக்தி உருவாக்க அமைப்பின் அறிமுக விழாவில் உரையாற்றிய பிரிடிஷ் கவுன்சில் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் மெக்டொனால்ட் குறிப்பிட்டார்.

கொழும்பு பிரிடிஷ் கவுன்சிலானது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான தனது பசுமையான முயற்சிகளை எதிர்வரும் காலத்திற்கும் தொடர்வதுடன் அதன் ஆதரவாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் அதிக வாய்ப்புகளை வழங்கும் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும் எதிர்பார்க்கின்றது.