தடுப்பூசி தயாரிப்பு தொடர்பான ஒழுங்குமுறையினை வெளியிட நடவடிக்கை
நாட்டில் தடுப்பூசி தயாரிப்பு தொடர்பான ஒழுங்குமுறையினை வெளியிடுவது தொடர்பான கலந்துரையாடலொன்று நீதி அமைச்சில் நேற்று (01) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
தடுப்பூசி தயாரிப்பின் சட்டபூர்வமான நிலை குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமயில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
"உலகில் தினசரி தடுப்பூசிகளுக்கான தேவைகள் அதிகரிக்கின்றனவற்றன. இதனால் அவற்றின் விலைகளும் உயர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலம் பணத்தை சேமிக்க முடியும்" இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமனா தெரிவித்து தடுப்பூசியை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
ஆகஸ்ட் மாதத்திற்குள் உள்நாட்டு உற்பத்தி மூலம் 6 மில்லியன் தடுப்பூசிகளையும், செப்டம்பர் மாதத்திற்குள் 07 மில்லியன் தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்யும் திறன் நாட்டிற்கு உள்ளது என்றும், இந்த இலக்குகள் இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை பூர்த்தி செய்தால், செப்டம்பர் மாதம் நாட்டின் மக்கள் தொகையில் கணிசமான சதவீதத்திற்கு தடுப்பூசி போடலாம் என்றும் இது தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இலங்கையுடன் தொடர்புடைய தடுப்பூசிகளை தயாரிப்பதற்கு வசதியாக தேவையான சட்ட ஒப்பந்தங்களை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து சட்டமா அதிபர் துறை, சட்ட வரைஞ்சர் திணைக்களம் மற்றும் அரச மருந்துக் கூட்டுத்தாபன ஆகியவற்றின் அதிகாரிகளுடன் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
Comments (0)
Facebook Comments (0)