பாராளுமன்ற அமர்வு நேரத்தில் மாற்றம்
பாராளுமன்ற அமர்வு நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பான தீர்மானம் பாராளுமன்ற அலுவல்கள் குழுவினால் இன்று (10) வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கமைய அடுத்த பாராளுமன்ற அமர்வு நேரம் முற்பகல் 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மொழி மூலமான கேள்விகளை எழுப்ப முடியும் என பாராளுமன்றம் அறிவித்தது.
Comments (0)
Facebook Comments (0)