ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த துணையாக இருப்போம்: பிள்ளையான்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்தி அரசாங்கத்துக்குத் துணையாக இருப்போம் என தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
யுத்தம் நிறைவடைவதற்கு முன்னதாகவே அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மாகாண சபைத் தேர்தலை நடத்தி தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்கினார் எனவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று (10) வியாழக்கிழமை அவர் மேற்கொண்ட கன்னி உரையின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Comments (0)
Facebook Comments (0)