ஊடகத் துறை பேராசிரியராக ரகுராம் பதவியுயர்வு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சி. ரகுராம் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இதற்கான ஒப்புதலை பல்கலைக்கழகப் பேரவை வழங்கியுள்ளது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று (25) சனிக்கிழமை உப வேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை மற்றும் நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியராக ரகுராம் பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.
Comments (0)
Facebook Comments (0)