ஈஸ்டர் தாக்குதல்; 'இந்தியாவிற்கு தொடர்பு' என வெளியிட்ட செய்தியை நீக்கியது பி.பி.சி
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் இந்தியாவிற்கு தொடர்பு உள்ளது எனத் தெரிவித்து பி.பி.சி சிங்கள இணையத்தளம் வெளியிட்ட செய்தியினை தற்போது நீக்கியுள்ளது.
"பரஸ்பர பாதுகாப்பு, பகிரப்பட்ட சமாதானம் மற்றும் செழுமைக்கு வித்திடும் வலுவான இந்திய - இலங்கை உறவினைக் காண விரும்பாதவர்களின் முற்றிலும் தவறானதும் ஊகங்களின் அடிப்படையிலுமான கூற்றுக்களை ஆதாரமாகக் கொண்டு இந்த கட்டுரை அமைந்திருந்தது" எனக் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டது.
Truth alone Triumphs (வாய்மையே வெல்லும்)!
— India in Sri Lanka (@IndiainSL) February 26, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இந்தியா அரங்கேற்றியதாக தீயநோக்கங்களுடன் குற்றஞ்சுமத்தும் அடிப்படை ஆதாரங்களற்ற கட்டுரை ஒன்றை பிபிசி சிங்கள பதிப்பானது தனது இணையத்தளத்திலிருந்து நீக்கியுள்ளது. https://t.co/7GOMJEfqmQ (1/2) pic.twitter.com/kXjdPoDpbo
Comments (0)
Facebook Comments (0)