அமெரிக்க பகிரங்க தொடர்: 2ஆம் சுற்றில் முதல்நிலை வீராங்கனை

அமெரிக்க பகிரங்க தொடர்: 2ஆம் சுற்றில் முதல்நிலை வீராங்கனை

ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு உலகின் முதல்நிலை வீராங்கனையான ஜப்பானின் நயோமி ஒஸாகா தகுதிபெற்றுள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் அன்னா பிளின்கோவாவை எதிர்கொண்ட நடப்புச் சம்பியனான ஜப்பானின் நயோமி ஒஸாகா, 6-4, 6-7 (5-7), 6-2 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, இன்று அதிகாலை இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் நிக்கொல் கிப்ஸை எதிர்கொண்ட உலகின் நான்காம்நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப், 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், நேற்றிரவு இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் சக செக் குடியரசு வீராங்கனை டெனிஸா அல்லெர்ட்டோவாவை எதிர்கொண்ட உலகின் ஆறாம்நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெற்றா குவிற்றோவா, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.

இதேவேளை, நேற்றிரவு இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டில் ஸ்பெய்னின் போலா படோஸாவை எதிர்கொண்ட உலகின் ஏழாம்நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பேர்ட்டன்ஸ், 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்காயாவை எதிர்கொண்ட உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீவன்ஸ், 3-6, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, இன்று அதிகாலை இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஜோன் மில்மானை எதிர்கொண்ட உலகின் இரண்டாம்நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால், 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் இத்தாலியின் தோமஸ் ஃபபியானோவை எதிர்கொண்டிருந்த உலகின் நான்காம்நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமினிக் தியெம், 4-6, 6-3, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

இதேவேளை, நேற்றிரவு இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் மோல்டோவாவின் றாவுல் அல்போட்டை எதிர்கொண்ட உலகின் ஆறாம்நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், 6-1, 6-3, 3-6, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் அன்ட்ரே ருப்லெவ்வை எதிர்கொண்ட உலகின் எட்டாம்நிலை வீரரான கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ், 4-6, 7-6 (7-5), 6-7 (7-9), 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, இன்று அதிகாலை இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் கனடாவின் வசெக் பொப்சில்லை எதிர்கொண்ட உலகின் ஒன்பதாம்நிலை வீரரான ரஷ்யாவின் கரென் காஞ்சனோவ், 6-4, 5-7, 5-7, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், நேற்றிரவு இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் கஸக்ஸ்தானின் மிக்கைல் குகுஷ்கின்னை எதிர்கொண்ட உலகின் 10ஆம் நிலை வீரரான ஸ்பெய்னின் றொபேர்ட்டோ பட்டிஸ்டா அகட், 6-3, 1-6, 4-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.