வியத்மக சார்பில் 9 பேர் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்படும் வியத்மக அமைப்பின் பிரதிநிதிகள் ஒன்பது பேர் 2020ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலில் நாடளாவிய ரீதியில் போட்டியிடுவதாக குறித்த அமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
'சிறந்த எதிர்காலத்திற்காக தொழிற்பாண்டவர்கள்' எனும் தொனிப்பொருளிலான இந்த அமைப்பின் ஒன்பது உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடுகின்றனர்.
இதற்கு மேலதிகமாக குறித்த அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலிலும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசியப் பட்டியல்:
விசேட வைத்தியர் சீதா அரம்பொல – மேல் மாகாண முன்னாள் ஆளுநர்
கலாநிதி அஜித் நிவாட் கப்ரால் - மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்
வேட்பாளர்கள்:
கலாநிதி சரத் வீரசேகர – முன்னாள் பிரதி அமைச்சர் - கொழும்பு மாவட்டம்
சமூக சேவையாளர் அநுர பெர்ணான்டோ - கொழும்பு மாவட்டம்
கலாநிதி நாலக கொடகேவா – கம்பஹா மாவட்டம்
பொறியியலாளர் கொட்டேகொட – மாத்தளை மாவட்டம்
வைத்தியர் திலக் ராஜபக்ஷ - அம்பாறை மாவட்டம்
வைத்தியர் உபுல் கலபதி - ஹம்பாந்தோட்டை மாவட்டம்
பேராசிரியர் சன்ன ஜயமான – அநுராதபுர மாவட்டம்
கலாநிதி குணபால ரத்னசேகர – குருநாகல் மாவட்டம்
சட்டத்தரணி உதய கீர்த்திகொட – கண்டி மாவட்டம்
Comments (0)
Facebook Comments (0)